For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போட்டிக்கு முடிவு கட்ட திட்டம்... ப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கும் அமேசான்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டை சக போட்டியாளரான அமேசான் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கும் அமேசான்!

    நியூயார்க்: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டை சக போட்டியாளரான அமேசான் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஆன்லைன் வர்த்தகத்தில் தனி முத்திரை பதிக்க அமேசான் இந்த முடிவை எடுத்து இருக்கிறது. உலகம் முழுக்க அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் முக்கிய இடத்தில் இருக்கிறது.

    ஆனாலும் சீனாவில் இருக்கும் அலிபாபா நிறுவனமும், இந்தியாவில் இயங்கும் ப்ளிப்கார்ட் நிறுவனமும் அமேசானுக்கு முக்கிய போட்டியாக உள்ளது. அந்த வகையில் ப்ளிப்கார்ட்டை முடக்க அமேசான் இந்த திட்டம் தீட்டி இருக்கிறது.

    நம்பர் ஒன் அமேசான்

    நம்பர் ஒன் அமேசான்

    உலக அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது. மிகவும் குறைந்த விலை, ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்ற சலுகைகள் என நிறைய விஷயங்களில் அமேசான் நிறுவனம் முக்கிய இடம் வகிக்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், சீனாவை தவிர பெரும்பாலான இடங்களில் தங்கள் கிளையை தொடங்கி உள்ளது.

    ப்ளிப்கார்ட் முன்னேற்றம்

    ப்ளிப்கார்ட் முன்னேற்றம்

    ஆனால் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ப்ளிப்கார்ட் நிறுவனம் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக செயல்பட்டு வருகிறது. ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் இந்திய மார்க்கெட் மட்டுமே. இங்கு இருக்கும் மக்களை, ப்ளிப்கார்ட் மூலம் பொருட்கள் வாங்க வைப்பது மட்டுமே அவர்களின் முக்கிய குறிக்கோள்.

    60 சதவிகிதம்

    60 சதவிகிதம்

    இந்த நிலையில்தான் தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனத்தை அமேசான் நிறுவனம் வாங்க போகிறது என்று தகவல் கசிந்து உள்ளது. ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தை முடக்க அமேசான் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    வால்மார்ட் போட்டி

    வால்மார்ட் போட்டி

    ஆனால் ஏற்கனவே ப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்க முடிவு செய்து இருக்கிறது. வால்மார்ட் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 40 சதவிகித பங்குகளை வாங்க ஏற்கனவே பேரம் பேசியுள்ளது. இந்த நிலையில் இந்த விஷயத்தில் அமேசானும் குதித்து இருப்பதால் ஆன்லைன் வியாபார உலகின் புதிய புயல் கிளம்பி உள்ளது.

    English summary
    Amazon in the race to buy Flipkart after Walmart. Amazin plans to buy 60% share of the Flipkart, at the same Walmart already planned to buy 40% of Flipkart shares.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X