உடலுக்கு ஏற்றது போல் கச்சிதமாக ஆடை வழங்க திட்டம்.. மக்களை ஸ்கேன் செய்யும் அமேசான் நிறுவனம்!
நம்முடைய உடலை ஸ்கேன் செய்து அதற்கு தகுந்த படி ஆடைகளை அனுப்ப அமேசான் முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக பெரிய திட்டத்தை வகுத்துள்ளது.
நியூயார்க்: நம்முடைய உடலை ஸ்கேன் செய்து அதற்கு தகுந்த படி ஆடைகளை அனுப்ப அமேசான் முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக பெரிய திட்டத்தை வகுத்துள்ளது.
தற்போது ஆன்லைன் வியாபார உலகில் பெரிய போட்டியே நிலவி வருகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த பொருட்களை எப்படி வழங்கலாம் என்று பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் எல்லாம் போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறது.
அதன் ஒரு வழியாக, தற்போது அமேசான், நம்முடைய உடலை ஸ்கேன் செய்து ஆடை தயாரிக்க உள்ளது. இது பிளிப்கார்ட், அலிபாபா போன்ற போட்டியாளர்களுக்கு பெரிய அடியாக இருக்கும் எனப்படுகிறது.

திட்டம்
சில நாட்களுக்கு முன் தான் அமேசான் புதிய டெலிவரி திட்டம் ஒன்றை வகுத்தது. அதவாது ஒரு பொருள் ஆர்டர் செய்தால், அதை நாம் காரில் இருக்கும் போது கூட வந்து டெலிவரி செய்யும் வசதியை உருவாக்க போவதாக கூறியது. அதேபோல் ஆர்டர் செய்து மூன்று மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் வசதியை உருவாக்க இருப்பதாகவும் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இன்னும் மக்களை ஈர்க்கும் வகையில், ஸ்கேன் செய்யும் வசதியை உருவாக்கி உள்ளது.

என்ன செய்வார்கள்
நாம் நினைப்பது போல் அல்லாமல் அமேசான் எல்லோரையும் ஸ்கேன் செய்யாமல் சிலரை மட்டும் ஸ்கேன் செய்ய இருக்கிறது. அவர்களின் நியூயார்க் அலுவலகத்தில் மட்டும் இந்த ஸ்கேன் நடக்கும். அங்கு சென்று உடலை ஸ்கேன் செய்து மிக கச்சிதமான ஆடையை வாங்கலாம். அதேபோல் நமக்கு ஏற்ற மாதிரி ஆடையும் மாற்றி வடிவமைத்துக் கொள்ளலாம். நமக்கு என்ன வேண்டுமோ அப்படி செருப்பு ஷூக்களை தேர்வு செய்யலாம்.

வார வாரம்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே நபரை அமேசான் வாரம் ஒரு முறை ஸ்கேன் செய்ய இருக்கிறது. எல்லா வாரமும் ஒரு நபரின் உடல் எப்படி மாறுபடுகிறது என்று கண்டுபிடிக்க உள்ளது. இதனால் நீண்ட நாள் உடலுக்கு பொருந்தும் வகையில் ஆடையை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளது. உடல் எடை கூடிய பின், அந்த ஆடை உடலுக்கு பொருந்தவில்லை என்ற பிரச்சனையில் இருந்து இது விடுதலை அளிக்கும்,.

எல்லோருக்கும் உதவும்
இந்த ஸ்கேன் தகவல்கள் அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் இல்லை என்பதுதான் இதில் சிறப்பம்சம். இதில் வரும் தகவல்களை வைத்து அமேசான் நிறுவனம் ஒரு அட்டவணை போட உள்ளது. அதை வைத்து எல்லோருக்கும் எந்தெந்த அளவில், எந்த ஸ்டைலில் உடை கொடுத்தால் உடலுக்கு கச்சிதமாக இருக்கும் என்று கண்டுபிடிக்க உள்ளது. இதற்காக அமெரிக்கர்கள் மட்டுமில்லாமல், மாற்று நாட்டு நபர்களையும் ஸ்கேன் செய்ய உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications