ஒரு 'குட் நியூஸ்': 'எபோலா' தாக்கிய அமெரிக்க டாக்டர் குணமடைந்து வீடு திரும்பினார்
நியூயார்க்: எபோலா வைரஸ் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கென்ட் பிரான்ட்லி குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1, 350 ஆக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக லைபீரியாவில் தான் அதிகாமானோர் பலியாகியுள்ளனர். எபோலா வைரஸ் தாக்கி லைபீரியாவில் இதுவரை 576 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் லைபீரியாவில் பணியாற்றி வந்த அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கென்ட் பிரான்ட்லியை எபோலா வைரஸ் தாக்கியது.

இதையடுத்து அவர் கடந்த 2ம் தேதி தனி விமானம் மூலம் அமெரிக்கா கொண்டு வரப்பட்டார். அமெரிக்கா வந்த அவர் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு எபோலா காய்ச்சலுக்கு அமெரிக்கா தயாரித்த இசட்மாப் மருந்து சோதனை அடிப்படையில் கொடுக்கப்பட்டது.
இசட்மாப் மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். லைபீரியாவில் எபோலா காய்ச்சலால் அவதிப்படும் 3 டாக்டர்களுக்கு சோதனை அடிப்படையில் இசட்மாப் கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல் நலம் தேறி வருவதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications