பறக்கும் போதே வழி தவறிய ஏவுகணை.. மிரண்டு போன அமெரிக்க விமான படை.. கடைசி நொடியில் வெடித்தது!
அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்ட கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையில் பிரச்சனை ஏற்பட்டதால் அது வானத்திலேயே வைத்து அழிக்கப்பட்டது.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்ட கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையில் பிரச்சனை ஏற்பட்டதால் அது வானத்திலேயே வைத்து அழிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை வைத்து இருக்கிறது. இந்த ஏவுகணைகள் மூலம், உலகில் எந்த நாட்டையும் தாக்கும் சக்தி சில நாடுகளுக்கு இருக்கிறது.
அந்த வகையில் அமெரிக்கா விமானப்படை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து வருகிறது. தற்போது புதிய ரக ஏவுகணைகளை சோதனை செய்கிறது.

மினிட்மேன் ஏவுகணை
இந்தநிலையில் நேற்று மினிட்மேன் 3 ஏவுகணையை சோதனை செய்தார்கள். மினிட்மேன் 1 மற்றும் 2 வெற்றிபெற்றதை அடுத்து 3வதை சோதனை செய்தார்கள். அமெரிக்காவின் வேண்டர்பேர்க் போர் விமானதளத்தில் இருந்து இந்த ஏவுகணையை சோதனை செய்தனர்.

சரியாக செல்லவில்லை
ஆனால் இந்த ஏவுகணை வானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போதே பிரச்சனையில் சிக்கியது. விமானப்படை நிர்ணயித்து இருந்த புள்ளியை நோக்கி செல்லாமல் விலகி சென்று இருக்கிறது. இதனால் விமானப்படை வீரர்கள், அதிகாரிகள் பதட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

வெடிக்க வைத்தனர்
இதையடுத்து விமானப்படை அதிகாரிகள் வேகமாக வேலையில் இறங்கினர். வானத்தில் செல்லும் போதே அதை வெடிக்க வைத்தனர். தானாக வெடிக்க வைக்கும் வசதியை வைத்து, ஏவுகணையை வானத்திலேயே வெடிக்க வைத்தனர்.

பிரச்சனை
நேற்று இந்த ஏவுகணையை வெடிக்க வைக்கவில்லை என்றால் வேறு எங்காவது விழுந்து வெடித்து இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது .
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications