திடீர் அதிர்ச்சி.. பிரான்ஸ் பெண் பிரதமர் ராஜினாமா.. அடுத்த பிரதமர் யார் தெரியுமா.. ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் சில காரணங்களுக்காகத் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் முதன்மையானது பிரான்ஸ்... அங்கே இப்போது இம்மானுவேல் மக்ரோன் அதிபராக இருக்கிறார். மேலும், எலிசபெத் போர்ன் என்பவர் பிரதமராக இருந்து வந்தார்.

 Amid cabinet reshuffle French PM Elisabeth Borne resigns

அங்கே இப்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிரான ஒரு மனநிலையே இருக்கிறது. தேர்தல் இப்போதைக்கு இல்லை என்ற போதிலும், மக்களின் எதிர்ப்பு மனநிலையைச் சமாளிப்பது குறித்து அவர் யோசித்து வந்தார்.

இம்மானுவேல் மக்ரோன்: இதற்காக இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரவும் திட்டமிட்டார். இதற்கிடையே அந்நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பல காலம் இழுபறி நடந்த நிலையில், ஒரு வழியாக போர்ன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

இருப்பினும், 34 வயதே ஆன கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் அடுத்து பிரதமராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கேப்ரியல் அட்டல் பிரதமராக நியமிக்கப்பட்டால், பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்ற சிறப்பை அவர் பெறுவார். எலிசபெத் போர்ன் நேற்று ராஜினாமாவை அதிபரிடம் சமர்பித்ததாகவும் அதை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் பிரான்ஸ் அதிபர் அலுவலகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்ப்பு இருந்தது: அங்கே கடந்த சில காலமாகவே மக்ரோன் மீது கடும் எதிர்ப்பு இருக்கிறது. அதைச் சரி செய்ய வேண்டும் என்றால் மக்ரோன் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாகப் பல சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால் மட்டுமே அவர் அடுத்த அதிபர் தேர்தல் குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியும்.

கடந்த 2022இல் மாக்ரோன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அதிபராக வந்திருந்தார். இருப்பினும், அதன் பிறகு அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தது. இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த மாக்ரோன் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது மேலும், மாக்ரோன் அரசு கொண்டு வந்த இம்மிகிரேஷன் சட்டமும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

ராஜினாமா: இந்தச் சூழலில் தான் எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 62 வயதான எலிசபெத் போர்ன், பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். இருப்பினும், அவரால் தனது பதவிக்காலம் முழுக்க பிரதமர் பதவியில் இருக்க முடியவில்லை.

இப்போது அடுத்த பிரதமர் யார் என்பதைத் தேர்வு செய்யும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. அட்டலைத் தவிர, 37 வயதான பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு மற்றும் 43 வயதான முன்னாள் வேளாண் அமைச்சர் ஜூலியன் டெனோர்மண்டி ஆகியோர் பிரான்ஸ் பிரதமர் ரேஸில் உள்ளனர்.

ஏன்: பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை அங்கே அதிபர் தான் பொதுவான கொள்கைகளை வகுப்பார். அதேநேரம் அன்றாட அரசாங்க நிர்வகிக்கும் பொறுப்பு பிரதமருக்குச் செல்லும். அதாவது அதிருப்தி எதாவது ஏற்பட்டால் முதலில் சிக்குவது பிரதமர் பதவியில் இருப்பவர் தான். அதன்படியே இப்போதும் எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதவியை இழந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+