டிரம்பால் அசராத சீனா.. அமெரிக்காவுக்கு கொடுத்த அடுத்த அடி! ஹாலிவுட் சினிமாவுக்கு ஜி ஜின்பிங் ‛செக்'
பெய்ஜிங்: சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து வரிகளை விதித்து வருகிறது. இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்கா மீது வரிகளை விதிக்கிறது. இருநாடுகள் இடையே இந்த வரி விதிப்பு நடவடிக்கை தொடர்வதால் வர்த்தக மோதல் தொடங்கி விட்டது. இதற்கிடையே தான் சீனாவில், அமெரிக்காவின் ஹாலிவுட் படங்களை திரையிடுவது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் நல்ல மார்க்கெட் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு இடையே வர்த்தக மோதல் தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் சீனாவை டார்க்கெட் செய்து கூடுதல் விதிகளை விதித்து வருகிறார். முதற்கட்டமாக 10 சதவீதம், 2வது கட்டமாக 10 சதவீதம், அதன்பிறகு 34 சதவீதம், அதைத்தொடர்ந்து 50 சதவீதம் என்று மொத்தம் 104 சதவீத வரிகளை சீனாவுக்கு விதித்தார் டிரம்ப்.

இதன் தொடர்ச்சியாக தற்போது கூடுதலாக 41 சதவீத விதியையும் அறிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப். இதன்மூலம் சீனாவுக்கு மொத்தம் அமெரிக்கா 145 சதவீத வரியை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவை சீண்டி வருகிறது. முதற்கட்டமாக விவசாய பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதமும், அதன்பிறகு 34 சதவீதம், 50 சதவீதம் என்று மொத்தம் 99 சதவீத வரிகளை அமெரிக்காவுக்கு சீனா விதித்தது.
இதற்கிடையேதான் அமெரிக்கா கடந்த 2ம் தேதி இந்தியா, சீனா உள்பட 100க்கும் அதிகமான நாடுகளுக்கு வரிகளை விதித்தது. இந்தியாவுக்கு 26 சதவீதமும், சீனாவுக்கு 34 சதவீத வரியும் கடந்த 2ம் தேதி விதிக்கப்பட்டது. அதேபோல் பிற நாடுகளுக்கும் தனித்தனியே வரிகள் விதிக்கப்பட்டது. இதனால் உலகளாவிய மார்க்கெட் சரிய தொடங்கியது. மேலும் இந்த வரி விதிப்பு முறை என்பது நாடு முழுவதும் மந்தநிலையை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறினர்.
இதையடுத்து கடந்த 2ம் தேதி இந்தியா உள்பட 100 நாடுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் சீனாவுக்கான வரியை மட்டும் அவர் நிறுத்தி வைக்கவில்லை. இதனால் சீனா கடும் கோபமாகி உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க சீனா முடிவு செய்துள்ளது.
அதன்படி சீனாவில் அமெரிக்காவின் ஹாலிவுட் படங்களை வெளியிடுவதை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை சீனாவின் தேசிய திரைப்பட நிர்வாகம் எடுத்துள்ளது. சீனா மீதான இரக்கமற்ற வரி விதிப்பு நடவடிக்கையை கண்டித்து அங்குள்ள மக்கள் ஹாலிவுட் படங்களை புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் ஹாலிவுட் படங்கள் திரையிடப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications