வங்கதேசத்துக்கு அடுத்த ஷாக்.. வன்முறைக்கு நடுவே சிட்டகாங்கில் இந்தியா செய்த சம்பவம்
டெல்லி: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்த நிலையில் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து விசா மையங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் இப்போது சிட்டகாங்க் விசா மையத்தை மத்திய அரசு மூடியுள்ளது. இதனால் இந்தியா வர நினைக்கும் வங்கதேசத்தினருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் மீண்டும் வன்மறை வெடித்தது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானது. 500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக உள்ளார். மேலும் வங்கதேசத்தில் தற்போது செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பினர் நம் நாட்டை துண்டாட உள்ளதாகவும், பிரச்சனைகளுக்கு எல்லாம் இந்தியா தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர்.
இதனை நம் நாடு கடுமையாக கண்டித்துள்ளது. இதற்கிடையே தான் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. வங்கதேசத்தில் 2026 பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்கா-8 தொகுதி வேட்பாளராக ஷெரீப் உஸ்மான் ஹாடி (32) என்ற மாணவர் தலைவர் களமிறங்கினார். ‛இன்கிலாப் மஞ்சா' என்ற மாணவர் போராட்டக் குழுவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை முன்னின்றி வழிநடத்தியவர்களில் ஒருவர்.
அவர் பிரசாரத்தில் ஈடுபட்டபோது முகமூடி அணிந்திருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு காயமடைந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. பத்திரிகை அலுவலகங்கள், இந்திய துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இந்திய துணை தூதரின் வீடு மீது கல்வீசப்பட்டது. மைமன்சிங் மாவட்டம் பலுகா பகுதியை சேர்ந்தவர் தீபு சந்திர தாஸ் (30) என்ற இந்து இளைஞர் எரித்த கொலை செய்யப்பட்டார்.
இதனால் அங்கு இந்துக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள விசா மையத்தை இந்தியா தற்காலிகமாக மூடி உள்ளது. சிட்டகாங் என்பது வங்கதேசத்தின் முக்கிய துறைமுகம நகராகும். அந்த நாட்டின் முக்கிய நகராக உள்ளதால் அங்கு விசா மையம் செயல்பட்டு வந்தது.
தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை விசா மையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசா மையங்களில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு தான் தூதரகத்துக்கு அனுப்பப்படும். அதன்பிறகு தான் இந்தியா வர வங்கதேசத்தினருக்கு அனுமதி கிடைக்கும். இந்த மையம் மூடப்பட்டுள்ளதால் இனி விசா அவர்களுக்கு கிடைக்காது.
மேலும் இப்படி விசா மையங்களை வங்கதேசத்தில் மூடுவது இது முதல் முறையல்ல. 2 நாட்களுக்கு முன்பு டாக்காவில் ஜமுனா ஃபுயூட்டர் பார்க்கில் உள்ள இந்தியாவுக்கான விசா விண்ணப்ப மையத்தையும், வங்கதேசத்தின் ராஜ்ஷாஹி, குல்னா நகரில் உள்ள 2 விசா மையங்களும் இன்று மூடப்பட்டது. தற்போது அடுத்தடுத் இந்த மையங்கள் மூடப்பட்டுள்ளதால் வங்கதேசத்தின் இந்தியா வருவதற்கான விசா பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது மத்திய அரசு. இதனால் இந்தியாவுக்கு வணிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வர திட்டமிட்ட வங்கதேசத்தினர் பாதிக்கப்பட உள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications