ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் விஷமம்.. நிர்வாணப் பெண்ணின் படத்தைப் போட்ட ஹேக்கர்கள்!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் குத்துச் சண்டை வீரர் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் சில விஷமிகள் நிர்வாணப் பெண்களின் படத்தைப் போட்டு ஹேக் செய்துள்ளனர்.
ரமலான் நோண்பு மாதத்தின்போது இப்படி நடந்ததால் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால் தான் இதைச் செய்யவில்லை என்றும் ஹேக்கர்களே இதற்குக் காரணம் என்றும் ஆமிர்கான் விளக்கியுள்ளார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்தவர் ஆமிர்கான். 27 வயதான இவர் குத்துச் சண்டை வீரர் ஆவார். இவரது டிவிட்டர் பக்கத்தில் இரு பெண்கள் நிர்வாண நிலையில் படுத்துக் கிடப்பதைப் போன்ற படம் திடீரென இடம் பெற்றது. இதனால் அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரமலான் நோண்பு மாதத்தின்போது நிர்வாணப் படங்களைப் பார்க்கக் கூடாது என்ற வழிமுறை உள்ளது. இந்த நிலையில் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் இப்படிப் படம் வெளியானதால் பலரும் கோபமடைந்தனர். பலரும் ஆமிர்கானை வசை பாட ஆரம்பித்தனர்.
ஆனால் உடனடியாக இந்தப் படத்தை நீக்கிய ஆமிர்கான், அதற்காக மன்னிப்பும் கேட்டார். அதேசமயம் இதைத் தான் வெளியிடவில்லை என்றும், ஹேக்கர்களின் விஷமம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
2 நாட்களுக்கு முன்புதான் இருவரை ஆமிர்கான் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்தப் புகார் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் அவரது டிவிட்டர் பக்கத்தில் விஷமம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications