அமெரிக்காவில் அசத்தும் அமுல்.. முந்தியடிக்கும் பொதுமக்கள்! ஆனா விலையை பாருங்க.. தலையே சுத்துது!

Subscribe to Oneindia Tamil

ஆஸ்டின்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வேலை செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்குள்ள பிரபல கடையில் அமுல் பால் விற்பனைக்கு இருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அமுல் எந்தளவுக்குத் தனது சந்தையை விரிவுபடுத்தி வருகிறது என்பதையே இது காட்டுவதாக உள்ளது. அதேநேரம் பாலின் விலை இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

இந்தியர்கள் மேற்படிப்பு, வேலை என பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ச்சியாக அதிகளவில் வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள். குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்வோர் அதிகளவில் வெளிநாடுகளுக்குப் போகிறார்கள்.

america milk usa

இதுபோல வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு நமது இந்திய உணவுகளும், இந்தியாவில் கிடைக்கும் பொருட்களும் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் எதிர்கொண்ட மேஜர் பிரச்சினையாக இது இருந்தது. ஆனால், சமீப காலமாக அந்த நிலை மொத்தமாக மாறி வருகிறது.

அமுல்:

பல இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் பொருட்களை நேரடியாக விற்கத் தொடங்கியுள்ளன. இது அங்கு வாழும் இந்தியர்களுக்கு மிகப் பெரியளவில் உதவுவதாக இருக்கிறது. அப்படி தான் அமெரிக்காவில் ஒருவர் இந்தியாவின் பிரபல பால் நிறுவனமான அமுல் பால் விற்பனைக்கு இருப்பதை போட்டோவாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது இப்போது டிரெண்டாகி வருகிறது.

இந்த போட்டோ அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எடுக்கப்பட்டது. அங்குள்ள காஸ்ட்கோவில் (நம்ம ஊர் டி-மார்ட் போல) அமுல் பால் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் பால் பெரிய பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் விற்கப்படும் சூழலில், அந்த போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார். இதை அங்குள்ல அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்வமாக வாங்கி வருகிறார்கள்.

ரேட் அதிகம் தான்:

அமுல் கோல்ட் என்ற அந்த பால் 6 சதவிகிதம் கொழுப்பு கொண்டதாகும். ஒரு கேலன் என்பது சுமாராக 3.785 லிட்டராகும். அதன்படி பார்த்தோம் என்றால் 1 லிட்டர் பாலின் விலை 1.72 டாலராக உள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86.58ஆக உள்ள சூழலில், அதன்படி கணக்கிட்டுப் பார்த்தால் அமெரிக்காவில் விற்கப்படும் ஒரு லிட்டர் அமுல் பாலின் விலை இந்திய மதிப்பில் 148.92 ரூபாயாக உள்ளது.

அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வரும் சூழலில் பல கருத்துகளைக் கூறி வருகிறார்கள். பாலில் 6% கொழுப்பு என்பது அதிகம் என்றும் அமெரிக்காவில் ஏன் இந்த விலை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் அதன் விலையைக் குறிப்பிட்டு இந்தியாவில் விற்கப்படும் பாலின் விலையை ஒப்பிட்டு வருகிறார்கள். நமது நாட்டில் சராசரியாக ஒரு லிட்டர் பால் ரூ.50 முதல் ரூ.65க்கு விற்கப்படுகிறது. இது மாநிலத்தைப் பொறுத்தும் பாலில் உள்ள கொழுப்பின் அளவை பொறுத்தும் மாறுபடும்.

எப்படி:

இன்னும் சிலர் இந்தியாவில் இருந்து அமுல் எப்படி அமெரிக்காவுக்கு பாலை எடுத்து வருகிறது.. அதுவரை கெட்டுப்போகாமலா இருக்கும் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், இந்த பால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. அமுல் நிறுவனம் கடந்த மே மாதம் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (MMPA) ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி எம்எம்பிஏ நிறுவனம் அமெரிக்காவில் உள்ள பால் உரிமையாளர்களிடம் இருந்து பாலை சேகரித்து, பிராசஸ் செய்யும். அமுல் நிறுவனம் பாலை சந்தைப்படுத்தி பிராண்டிங் செய்யும்.

அமுல் பால்:

முதற்கட்டமாக இந்தியர்கள் அதிகம் இருக்கும் நியூயார்க், நியூ ஜெர்சி, சிகாகோ, வாஷிங்டன், டல்லாஸ் மற்றும் டெக்சாஸ் ஆகிய இடங்களில் பால் விற்பனையைத் தொடங்கி, பின்னர் அதை மெல்ல விரிவுபடுத்த அமுல் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமுல் என்பது ஒரு தனியார் நிறுவனம் இல்லை.. பால் கூட்டுறவு அமைப்பு நடத்தும் ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+