ஹாங்காங்கில் ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் போன முதலை தோல் ஹேண்ட்பேக்
ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள பிரபல ஏல நிறுவனமான கிறிஸ்டீஸில் நடந்த ஏலத்தில் முதலை தோலில் செய்த பிங்க்(ரோஜாப்பூ) நிற கைப்பை ஒன்று அதிகபட்சமாக ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் சென்றுள்ளது.
ஹாங்காங்கில் உள்ள பிரபல ஏல நிறுவனமான கிறிஸ்டீஸில் முதலையின் தோலால் செய்யப்பட்ட பெர்கின் கைப்பை கடந்த திங்கட்கிழமை ஏலத்தில் விடப்பட்டது. தங்கம், வைரத்தால் ஆன ஹார்டுவேர் உள்ள அந்த கைப்பை ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் சென்றுள்ளது. ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் ஒரு கைப்பை இவ்வளவு பெரிய தொகைக்கு சென்றுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
அந்த பையை ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் போன் மூலம் ஏலத்தில் எடுத்ததாக கிறிஸ்டி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைவிட கைப்பைக்கு 15 சதவீதம் கூடுதல் விலை கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் பிறந்து பிரான்சில் வசிக்கும் பிரபல நடிகையும், பாடகியுமான ஜேன் பெர்கினின் பெயர் தான் முதலையின் தோலால் ஆன அந்த கைப்பைக்கு வைக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை நடந்த ஏலத்தில் 300 டிசைனர் கைப்பைகள் ஏலத்தில் விடப்பட்டன. பலர் டிசைனர் கைப்பைகளை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications