ஜெகன்மோகினி ஜெயமாலினி போல முடியை விரிச்சுப் போட்டு எப்படி இருக்கு பாருங்க இந்த நாய்!
மெல்போர்ன்: இப்படி ஒரு பரந்து விரிந்த நாயை எங்காச்சும் பார்த்திருக்கீங்களா பாஸ்? இருக்கு இப்படியும் ஒரு நாய் இருக்கு. அதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லூக் கவனக் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அந்த நாய் இப்போது படு வேகமாக பிரபலமாகி விட்டது.
இந்த நாய் தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் கூட இது ஆப்கானிஸ்தானைப் பூர்விமாகக் கொண்ட நாயாகும். இப்போது இன்டர்நெட்டில் இது செம பரபரப்பாக உலா வருகிறது. அதை விட முக்கியமாக பேஸ்புக்கில் கிடைத்த பிரபலத்தால் இந்த நாய் தற்போது நாய் உணவு வகையான ஸ்போக்ஸ்டாக் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராகவும் மாறியுள்ளது.

இந்த நாய்க்கு டீ (Tea) என்று பெயர். பெண் நாய். வயது 5 ஆகிறது. இந்த நாய் ஷோ டாக் என்ற பல்வேறு கண்காட்சிகளில் பங்கேற்கும் நாயாக வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது அதிலிருந்து ஓய்வு பெற்று விட்டது. ஆனால் இதைத் தேடி தற்போது ஏகப்பட்ட விளம்பர வாய்ப்புகள் ஓடி வருகின்றனவாம்.

இந்த நாயின் உரிமையாளர் லூக் கனவாக். இவர் ஆய்ஸ்டர் பே பகுதியைச் சேர்ந்தவர். தங்களது நாய் வெகு பிரபலமாக மாறியிருப்பது லூக் குடும்பத்தை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
எங்களது நாய் தற்போது சூப்பர் மாடலாக மாறியுள்ளது. அது எங்களுக்குப் பெருமை தருகிறது. எங்களது நாயின் படத்தை பலரும் விரும்பி ஷேர் செய்து வருகின்றனர். இது டீக்குக் கிடைத்த கவுரமாகும் என்றார் லூக்.

"காபி" குடித்தபடியே சிந்தித்துப் பார்த்தால் "டீ" கூட அழகாத்தான் தெரியுது!












Click it and Unblock the Notifications