அடடா இவர்கள் அல்லவா ரியல் ஹீரோக்கள்.. என்னா உதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பக்கு: அசர்பைஜான் நாட்டில் தீப்பிடித்த காரில் சென்ற பயணிகளை முதியவர் ஒருவர் தைரியமாக அருகில் சென்று மீட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அசர்பைஜான் நாட்டில் கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த காரின் பின்னால் மற்றொரு கார் மோதியது.

An elderly man has gone barely to rescue the passengers in a firing car in Azerbaijan

இதில், முன்னால் சென்ற காரில் தீப்பிடித்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.

கார் தீப்பிடித்து எரிந்ததால் காப்பாற்ற சென்றவர்கள் அஞ்சி ஓடினர். அப்போது முதியவர் ஒரு தைரியமாக அருகில் சென்று காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் கதவு திறக்காததால் திணறிய அவர் ஓங்கி ஒரு உதைவிட்டார். ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. இதையடுத்து உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் காரின் மற்ற பக்கங்களின் வழியாகவும் சிலர் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

இந்த வீடியோக்காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவை பார்க்கும் மக்கள் அந்த நபருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An elderly man has gone barely to rescue the passengers in a firing car in Azerbaijan. This video is became on social networks.
Please Wait while comments are loading...