அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பயங்கரமாக வெடித்து சிதறிய ஆலை.. வீடுகளும் சேதம்

Subscribe to Oneindia Tamil

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வடமேற்கு ஹூஸ்டன் நகரில் ஒரு ஆலையில் தானியங்கி கதவு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளார்கள்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகர் அருகே வாட்ன் கிரைண்டிங் மற்றும் உற்பத்தி ஆலையில் அமெரிக்க நேரப்படி அதிகாலை 4.14 மணிக்கு தானியங்கி கதவின் லாக்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

An explosion at a manufacturing plant has shaken northwest Houston

இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்கள். இந்த விபத்து காரணமாக அருகிலுள்ள வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவுவதை தடுத்து அணைத்தனர்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பகுதி பொதுமக்கள் இந்த விபத்தை பார்த்து பூகம்பம் வந்துவிட்டதாக அச்சப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் தீ எரிந்த நிலையில் நகரமே புகை மூட்டமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+