ஆஸ்திரேலியாவில் முன்னாள் மாணவனுடன் தனிமையில் இருந்த ஆசிரியை.. இறுதியில் மறக்க முடியாத சம்பவம்
கான்பெரா: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் மெல்போர்ன் நகரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் ஆசிரியையாக எலினோர் லூயிஸ் என்பவர் ஒரு மாணவனுடன் பழகி வந்துள்ளார். அந்த மாணவன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துவிட்டார். அதன்பின்னரும் ஆசிரியை எலினோர் அடிக்கடி தனிமையில் அழைத்து பழகி வந்துள்ளார். இறுதியில் பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை பற்றி பார்ப்போம்.
ஆசிரியர் என்பது ஒரு மாணவனின் இரண்டாவது பெற்றோர் ஆவார். கல்வி என்பது ஒருவரின் வாழ்நாளை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதமாக இருக்கும் நிலையில், அந்த ஆயுதத்தை சரியான வழியில் பயன்படுத்தக் கூடியவரே சிறந்த ஆசிரியராக இந்த உலகத்தில் வலம் வருகிறார்கள்,
ஒரு ஆசிரியர் என்பது பாடம் நடத்துபவர் என்பதை தாண்டி, மாணவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள்
மாணவர்கள் கேட்கும் கேள்விகளை பொறுமையாக கேட்டுக்கொண்டு, தெளிவாக விளக்கக் கூடிய திறமை உள்ளவர்களாகவும், மிகவும் பொறுமைசாலிகளாகவும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். தன் பாடத்துறையில் ஆழ்ந்த அறிவுடன், மாற்றத்திற்குப் பின்பற்றக்கூடிய திறனும் உள்ளவர்களாக இன்றைக்கு பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதேபோல் மாணவர்கள் தங்களின் கல்வியை மட்டுமல்லாது நற்குணங்களையும் வளர்க்கும் ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள்.
கள்ளக்காதல்
ஆனால் சில பெண் ஆசிரியைகள் தங்களிடம் படிக்கும் மாணவனிடமே தவறாக பழகும் கேவலமான சம்பவங்கள் இந்த உலகத்தில் ஆங்காங்கே நடக்கிறது.ஆசிரியரை மாணவர் காதலிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நம் நாட்டிலும் நடக்கிறது. பிரேமம் பட பாணி காதல்களும், கள்ளக்காதல் மாதிரியான காதல்களும் ஆங்காங்கே நடக்கிறது.அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
காதல்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் மெல்போர்ன் நகரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பள்ளியின் ஆசிரியையாக 34 வயதாகும் எலினோர் லூயிஸ் என்பவர் 2017-ம் ஆண்டு சேர்ந்தார். அப்போது தனது வகுப்பில் உள்ள ஒரு மாணவனுடன் அவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் அவன் தனது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி சேர்ந்த பின்னரும் தொடர்ந்து வந்துள்ளது.
உல்லாசம்
இதனால் ஆன்லைன் மூலம் தினமும் அவர்கள் பேசி மேலும் நெருக்கமாக காதலை வளர்த்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வர இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த ஆசிரியையை இடைநீக்கம் செய்து அந்த பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications