விநாயகர் படம் பதித்த காலணிகள்.. பிரபல ஷூ நிறுவனம் விஷமம்.. குவியும் எதிர்ப்பு!

இந்து கடவுளான விநாயகரின் படம் பதித்த காலணிகளை பிரபல ஷு நிறுவனம் ஒன்று விற்பனைக்கு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஹோனோலுலு: இந்து கடவுளான விநாயகரின் படம் பதித்த காலணிகளை பிரபல ஷு நிறுவனம் ஒன்று விற்பனைக்கு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

இந்து கடவுளான விநாயகரும் முருகனும் உலகம் முழுக்க பல கோடி மக்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். இந்து மதத்தை சேராத சில மக்கள் கூட, இந்த இரண்டு கடவுள்களையும் அதிகம் விரும்பி வணங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் விநாயகரை அவமதிக்கும் வகையில் ஹவாயை சேர்ந்த ''மயூ வோக்'' நிறுவனம் ஷுக்களை வெளியிட்டுள்ளது.

என்ன நிறுவனம்

என்ன நிறுவனம்

மயூ வோக் ஹவாயில் மிகப்பெரிய ஆடை நிறுவனம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடைகள், வித்தியாசமான உபகரணங்கள், காலணிகளை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளிலும் இதற்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

மோசம்

மோசம்

இந்த நிலையில் இந்த நிறுவனம் இந்து கடவுளான விநாயகரின் படம் பதித்த காலணிகளை வெளியிட்டுள்ளது. பெண்கள் அணியும் ஷுக்கள் மற்றும் செருப்புகளில் இந்த படங்களை அவர்கள் பதித்து இருக்கிறார்கள். இதன் விலை 3000 ரூபாயில் இருந்து 6000 ரூபாய் வரை இருக்கும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் ஆடைகள்

பெண்கள் ஆடைகள்

அதேபோல் பெண்களின் லெக்கிங்ஸ் போன்ற ஆடைகளிலும் விநாயகர் உருவம் பதித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையம் முழுக்க வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மன்னிப்பு

மன்னிப்பு

சர்வதேச இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மயூ வோக் நிறுவனம் இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உடனடியாக தாங்கள் வெளியிட்ட ஷுக்களை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+