For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓமனில் உள்ள முலதா இந்தியப் பள்ளியில் நடந்த சாரண வீரர்களின் வருடாந்திர பயிற்சி முகாம்

By Siva
Google Oneindia Tamil News

மஸ்கட்: ஓமன் நாட்டின் முலதா இந்தியப் பள்ளியில் சாரண வீரர்களின் வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமினை இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் எஸ்.ஏ.எஸ். நக்வி தொடங்கி வைத்தார். சாரண வீரர்கள் சமூகத்தை கட்டமைக்க வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த முகாமில் கேப்டன்கள் ரீத்தா சிவ்ராஜ், அலைஸ் தாமஸ் மற்றும் பத்மினி ரவி ஆகியோர் பயிற்சியளித்தனர். முகாமில் 60 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Annual scout camp held in Muladha Indian School in Oman

இந்த பயிற்சி முகாமின் மூலம் மாணவ, மாணவிகளின் தனித்தன்மை மேலும் உயரும் என்று பயிற்சி வழங்குபவர்கள் தெரிவித்தனர். இந்த முகாமின் மூலம் முதல் உதவி அளிப்பது, கைவினைப் பொருட்கள் தயாரிப்பது உள்ளிட்ட திறமைகளையும் அவர்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர்.

பயிற்சி நிறைவு விழாவின் போது சிறப்புடன் செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முகாம் தொடக்க விழாவில் பள்ளி முதல்வர் சரீப், துணை முதல்வர் சுரேஷ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

English summary
Annual scout camp was held in Muladha Indian School in Oman. 60 students attended the camp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X