ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த ‘அனோரா’ திரைப்படம்.. யார் யாருக்கு விருதுகள்? முழு லிஸ்ட் இதோ!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது 'அனோரா' திரைப்படம். அதற்கு அடுத்தபடியாக 3 விருதுகளை வென்றுள்ளது 'தி ப்ரூட்டலிஸ்ட்' திரைப்படம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள டால்பி அரங்கில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. 97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் விவரங்கள் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி முதல் அறிவிக்கப்பட்டு வந்தது.

இதில் 'அனோரா' திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. அதேபோல 'தி புரூட்டலிஸ்ட்' 3 விருதுகளை வென்றது. ஷான் பேக்கர் இயக்கத்தில் அட்ரியன் பிராடி, மிக்கி மேடிசன் உள்ளிட்டோர் நடித்த படம் 'அனோரா'. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தட்டித் தூக்கிய அனோரா
பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டது 'அனோரா' திரைப்படம், இதில் சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, ஆகிய 5 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்று அசத்தியுள்ளது.
இதன் மூலம் 'அனோரா' திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்த ஆண்டுக்கான ஆஸ்கரில் அதிக விருது பெற்ற படம் என்ற பெருமை பெற்றுள்ளது. அதேபோல, 'The Brutalist' திரைப்படம் சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர் என 3 பிரிவுகளில் விருதுகளை வென்றது.
அனோரா படத்தின் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், எடிட்டருமான ஷான் பேக்கர், 3 ஆஸ்கர் விருதுகளை தானே பெற்றார். விருதை பெற்றுக்கொண்ட அவர், பாலியல் தொழிலாளர்கள் சமூகத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

ஆஸ்கர் விருது பட்டியல் முழு விவரம்
சிறந்த நடிகர் - அட்ரியன் பிராடி (Adrien Brody) (திரைப்படம் - தி ப்ரூட்டலிஸ்ட் (The brutalist)).
சிறந்த நடிகை - மைக்கி மேடிசன் (Mikey Madison) (அனோரா - Anora).
சிறந்த திரைப்படம் - அனோரா (Anora)
சிறந்த இயக்குநர் - ஷான் பேக்கர் (Sean Baker) (திரைப்படம் அனோரா (Anora))
சிறந்த துணை நடிகர் - கீரன் கல்கின் (The Real Pain)
சிறந்த துணை நடிகை - ஜோ சல்டானா (Emilia Perez)

சிறந்த சர்வதேச திரைப்படம் - ஐயம் ஸ்டில் ஹியர் (I'm Still Here) - பிரேசில்.
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை - அனோரா (Anora)
சிறந்த தழுவல் திரைக்கதை - கான்க்ளேவ் (Conclave)
சிறந்த ஒரிஜினல் இசை - தி புரூட்டலிஸ்ட் (The brutalist)
சிறந்த ஒளிப்பதிவு - தி புரூடலிஸ்ட் (The brutalist)
சிறந்த எடிட்டிங் - அனோரா (Anora)
சிறந்த ஒலி அமைப்பு - டியூன் பார்ட் 2 (Dune: Part Two)
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் - டியூன் பார்ட் 2 (Dune: Part Two)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ளோ (Flow)
சிறந்த அனிமேஷன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (In the Shadow of the Cypress)
சிறந்த ஆவணப்படம் - நோ அதர் லேண்ட் (No Other Land)
சிறந்த ஆவண குறும்படம் -தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
சிறந்த ஒரிஜினல் பாடல் - எமிலியா பெரெஸின் (Emilia Perez) எல் மால் (El Mal).
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) - விக்கெட் (Wicked)
சிறந்த ஒப்பனை - சப்ஸ்டன்ஸ் (Substance)
சிறந்த ஆடை வடிவமைப்பு - விக்டு (Wicked)












Click it and Unblock the Notifications