சிகரெட்டின் புகையை நுகர்ந்தால் “குண்டூஸ்” ஆகும் அபாயம்- ஆய்வில் தகவல்!
வாஷிங்டன்: சிகரெட் குடிப்பதால் மட்டுமல்ல அதன் புகையை நுகர்ந்தால் கூட உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
இதில் அதிர்ச்சி தரும் வகையில் புகைப்பழக்கம் உடையவர்கள் அவர்களை சுற்றி உள்ள பிறருக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.

இன்சுலின் எதிர்ப்புத் தன்மை:
சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் சுவாசிக்கப்படும்போது அவர்களது உடலில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை மாற்றம் பெறுகிறது.

4000 ரசாயனங்கள்:
இதனால் உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டில் இருந்து வெளியாகும் புகையில் சுமார் 4000 இரசாயனங்கள் உள்ளன.

செல்களில் மாற்றம்:
அவற்றில் சில புற்றுநோய் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது. இந்த புகை மனிதனின் செல்களில் உள்ள அடிப்படை அமைப்பை மாற்றியமைத்து பாதிப்பு ஏற்படுத்துகிறது.

எலிகளின் மூலமாக நிரூபணம்:
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட உட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் பிக்மான் மற்றும் பால் ரெனால்ட்ஸ் ஆகியோர் எலிகளை கொண்டு இதனை நிரூபித்துள்ளனர்.

இதயகோளாறுகள் அதிகம்:
மனிதனின் செல்லில் செராமைட் எனும் கொழுப்பை தூண்டுவதன் மூலம் எடையை அதிகரிக்கக்கூடிய சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு இதய கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications