விரைவில் தம்பி ஹாரியும் செட்டிலாகப் போகிறாராம்...!
லண்டன்: இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் விரைவில் அடுத்த திருமணம், அதுவும் இளவரசர் ஹரியினுடையது எனச் செய்தி பரவி வருகிறது. அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வராத நிலையில் அடுத்தாண்டு திருமணம், காதலியை கரம் பிடிக்கிறார் என விதவிதமாக வதந்திகள் உலா வருகின்றன.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியினரின் இளைய மகனான 29 வயது ஹாரி, தற்போது இங்கிலாந்து விமான படையில் அப்பாச்சி ஹெலிகாப்டரில் விமானியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது காதலியை அடுத்தாண்டு மணமுடிக்கப் போவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. பொதுவாகவே அரச குடும்பத்து விஷேசங்கள் குறித்து ஆர்வமாக உள்ள இங்கிலாந்து மக்கள் இச்செய்தியால் விரைவில் அரச குடும்ப விழா களைகட்டும் என ஆர்வமாக உள்ளனராம்.

தொழிலதிபர் மகள்...
ஹரி கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கிரசிடா போனாஸ் (24) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். கிரசிடா தொழில் அதிபர் ஜெப்ரி போனாஸ்-மேரி கயே குர்ஷன் தம்பதியின் மகள் ஆவார்.

விரைவில் திருமணாம்...?
வெளிப்படையாகவே தங்கள் காதலை வெளிப்படுத்திய இவர்கள், விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என பேச்சு அடிபடுகிறாது.

கல்யாணம்... குழந்தைகள்....
இதற்கிடையே திருமணம் செய்து கொண்டு மனைவி, குழந்தைகளுடன் வாழ வேண்டும் என இளவரசர் ஹாரி தனது விருப்பத்தை நண்பர்களிடம் தெரிவித்துள்ளாராம்.

இருவீட்டார் சம்மதம்...
திருமணத்திற்கு கிரசிடா தரப்பிலும் சம்மதம் கிடைத்துள்ளதால் அடுத்தாண்டு மீண்டும் இங்கிலாந்து அரண்மனைக் கல்யாணக் கோலம் போடும் என தெரிய வந்துள்ளது.

பத்திரிக்கைச் செய்தி...
ஹரி-கிரசிடா திருமண தகவல் குறித்து கிரசிடாவின் நெருக்கிய தோழி ஒருவர் கூறியதாக இத்தகவல் லண்டனில் வெளியாகும் பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications