-62°C வெப்பநிலையில் அண்டார்டிகா.. ஒரே நாளில் உடல் எடையை குறைக்க சிறந்த இடம்.. ஆடிப்போன நெட்டிசன்கள்
சென்னை: அண்டார்டிகாவின் கடுமையான பனிக்காலச் சூழலைக் காட்டும் ஒரு வீடியோ, இணையத்தில் பார்ப்பவர்களை ஆடிப்போக வைத்துள்ளது. -62°C வெப்பநிலையில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகள், மற்றொரு கிரகத்தில் எடுக்கப்பட்டது போல இருப்பதாகப் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். உடல் எடையைக் குறைக்க குளிர்காலத்தில் அண்டார்டிகாவுக்குச் செல்வதுதான் சிறந்த எடை குறைப்புத் திட்டம் என்று கிண்டல் செய்து நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
உலகத்திலேயே அண்டார்டிகாவில் தான் பனி அதிகமாக இருக்கும். எனவே உலகிலேயே குளிரான இடமாக அண்டார்டிகா இருக்கிறது. மைனஸ் வெப்ப நிலை தான் இருக்கும். வெறும் பனிப்பாறைகள் தான் இருக்கும். மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாகவே அண்டார்டிகா இருக்கிறது. அண்டார்டிகா கண்டம் பூமியின் தென் துருவத்தை மையமாகக் கொண்டுள்ளது. துருவப் பகுதிகள் சூரிய ஒளியை மிகக் குறைந்த கோணத்தில் மட்டுமே பெறுகிறது.

சூரியக் கதிர்கள் நேரடியாக பூமியின் நிலப்பரப்பில் படாமல், நீண்ட தூரம் வளிமண்டலம் வழியாகச் செல்ல வேண்டியிருப்பதால், சூரியனிலிருந்து வரும் வெப்பம் துருவப் பகுதிகளை அடைவது குறைகிறது. இதன் காரணமாக அண்டார்டிகா ஆண்டு முழுவதும் மிகக் குளிராக இருக்கிறது.அண்டார்டிகா மிகப்பெரிய கண்டமாக இருக்கிறது, அதனைச் சுற்றிலும் அண்டார்டிக் பெருங்கடல் இருக்கிறது.
அண்டார்டிக் சர்க்கம் போலர் நீரோட்டம் அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றி எந்தத் தடையுமின்றி ஒரு சக்திவாய்ந்த நீரோட்டமாக திகழ்கிறது. இந்த நீரோட்டம் தான் உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த வெப்பமான நீரை அண்டார்டிகா கண்டத்தை நெருங்கவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. இது அண்டார்டிகாவைக் குளிராக வைத்திருக்க காரணமாக இருக்கிறது. அண்டார்டிகா உலகிலேயே மிக அதிகமான சராசரி உயரத்தைக் கொண்ட இடமாக இருப்பதால் வெப்ப நிலை மிக குறைவாக இருக்கிறது.
இந்நிலையில் அண்டார்டிகாவின் கடுமையான பனிக்காலச் சூழலைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பனி உறைந்த அண்டார்டிகாவை பொறுத்தவரை ஆராய்ச்சிக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்றவர்கள் தங்கி உள்ளனர். அப்படி தங்கி உள்ள ஒருவர் எடுத்த சிறிய காணொளியில், ஒரு நபர் கதவைத் திறந்து வெளியில் வருகிறார். பனிக்காற்று உள்ளே வேகமாக வருவதாக இருக்கிறது. அதில் வெளியே எங்கும் பனி மூடிய வெள்ளை உலகம், பலத்த காற்றுடன் உறைந்த நிலையில் இருக்கிறது.
மங்கலான சூரிய ஒளியானது, இந்தச் சூழலை ஒரு அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் காட்சியைப் போல மிகவும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருககிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவி, ரெடிட்டில் 55,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
-62°C வெப்பநிலையில், கனமான பாதுகாப்பு ஆடைகள் இல்லாமல் வெளியில் சில நிமிடங்கள் இருப்பதுகூட மிகவும் ஆபத்தானது. உறைய வைக்கும் இந்தக் காற்றால் உடனடியாகப் பனிக்கட்டி பாதிப்பு ஏற்படும். இந்த நிலப்பரப்பு ஒரு பரந்த, அமைதியான காடு போலக் காட்சியளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.பல நெட்டிசன்கள் ஆச்சர்யத்தையும் பயத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
நெட்டிசன் ஒருவர் "இது நிஜமாகவே இப்படித்தான் இருக்கிறதா . நாம் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்ப்பது போல் எனக்கு தோன்றுகிறது; இது வேறு உலகம்," என்று கூறியுள்ளார். மற்றொருவர், "சஹாரா அல்லது அண்டார்டிகா போன்ற சில இடங்கள், 'உங்களுக்கு இங்கு வேலையில்லை' என்று இயற்கையே சொல்வது போல இருக்கிறது," என்று கருத்து தெரிவித்தார்.
விண்வெளிப் பயணங்களுடன் ஒப்பிட்ட ஒரு நெட்டிசன், "செவ்வாயில் குடியேறுவதற்கு முன், அண்டார்டிகாவில் ஐந்து ஆண்டுகள் வெளி உதவியின்றி வாழ்ந்து பாருங்கள்," என்று சவால் விட்டுள்ளார். உடல் எடையைக் குறைக்க குளிர்காலத்தில் அண்டார்டிகாவுக்குச் செல்வதுதான் சிறந்த எடை குறைப்புத் திட்டம்! உடலைச் சூடாக வைத்திருக்க ஒரு நாளைக்கு 10,000 கலோரிகள் வரை எரிக்க முடியும்," என்று கிண்டலாக இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications