ஐ-போன் 7, ஐ-போன் 7 பிளஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்.. விலை எவ்வளவு தெரியுமா?
சான்பிரான்சிஸ்கோ: உலகமே எதிர்ப்பார்த்த புதிய பொழிவுடன் ஐ-போன் 7, மாதிரிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் போன்கள் அறிமுகப்படுத்தியது. அதே போன்று இந்தாண்டின் ஐபோன் 7 மாடல்கள், வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கடந்த மாதம் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமானது ஐ-போன் 7 மாதிரியை நள்ளிரவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் ஐ-போன் 7 பிளஸ் மாதிரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 வும் அறிமுகப்படுத்தப்பட்டது.
பழைய ஐ போன் மாடல்களை விட 60 சதவீதம் அதிவேக கேமரா வசதி இதில் உள்ளது. இந்த செல்போன் ஜெட் பிளாக், பிளாக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய கலர்களில் வெளியாகிறது. ஆப்பிள் 7 பிளஸ்சில் பின்பக்க கேமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2 லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது.
இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஆப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸும், வைட் ஆங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் தாங்கும் பேட்டரி வசதியும் இதில் உள்ளது.
ஆப்பிள் ஐபோன் 7 ல் உலகில் பிரபலமான மரியோ கேம் அறிமுகமாகிறது. அதேபோல் சமீபத்தில் மிகவும் பிரபலமான ‛போக்கிமேன் கோ' விளையாட்டு ஆப்பிள் வாட்சிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபோனின் விலை:
ஐபோன் 7 ன் தொடக்க விலை ரூ. 44000 (32 ஜிபி), ஐபோன் 7 ப்ளஸ் தொடக்க விலை ரூ. 49,900 (32 ஜிபி) எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகார்பூர்வ விலை பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஐ-போன் 7, 7 ப்ளஸ் மாடல் போன்கள் அமெரிக்க சந்தைகளில் செப்டம்பர் 16 முதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐ-போன் 6, 6S மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவற்றின் அறிமுக விலை ரூ. 62,000 முதல் ரூ. 92,000 என்ற அளவில் இருந்தது. பின்னர் இந்த மாடல்களின் விலையில் 16% வரை விலை குறைப்பு செய்தது ஆப்பிள் நிறுவனம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications