விலையேறிப் போன வெங்காயம் - கண்ணீர் வடிக்கும் அரபு ஹோட்டல் முதலாளிகள்!
ரியாத்: இந்தியாவில் வெங்காயத்தின் விலை அதிகமானதால் அரபு நாட்டில் ஹோட்டல்கள் வைத்துள்ள முதலாளிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இந்திய குடும்பங்களின் சமையலறையின் அத்தியாவசியமான பொருளான வெங்காயத்தின் சில்லரை விலை நமது உள்நாட்டு சந்தையில் கிலோ ஒன்றுக்கு நூறு ரூபாயை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இந்திய வகை உணவுகளை விற்பனை செய்யும் ஓட்டல்களை நடத்திவரும் முதலாளிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதாக அராபிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதிகரிக்கும் விலை
இந்தியாவில் வெங்காய விளைச்சல் குறைவினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அதன் விளைவாக தற்போது நீடித்துவரும் விலையேற்றம், அதனை தடுக்க ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச விலை காரணமாக அரபு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

துபாய், பஹ்ரைன்
இதன் விளைவாக துபாய், சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் வெங்காயத்தின் விலை 30 சதவீதம் அதிகரித்து விட்டதாக ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எகிப்து வெங்காயம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இங்குள்ள மொத்த சந்தையில் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 1.5 திர்ஹம் ஆக இருந்தது.

பாகிஸ்தான் வெங்காயம்
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 1.7 திர்ஹம் ஆகவும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 2.50 திர்ஹம் ஆகவும் உள்ளது.

நீர்ச்சத்து குறைவு
சில்லரை விலையில் இந்திய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ மூன்று திர்ஹம் முதல் மூன்றரை திர்ஹமாக உள்ளது. நீர்ச்சத்து குறைவாக உள்ளதால் இந்நாடுகளில் இந்திய வெங்காயத்துக்கு கடும் கிராக்கி உள்ளது.

பிரியாணி ஹோட்டல்கள்
குறிப்பாக, இந்தியவகை பிரியாணி தயாரித்து விற்கும் உணவகங்களின் உரிமையாளர்களாக இருக்கும் இந்தியர்கள் வெங்காயத்தின் இந்த கிடுகிடு விலையேற்றத்தை எண்ணி கண்ணீர் வடிப்பதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications