சவுதியில் தவிக்கும் தமிழரா?: 050 - 6232870 என்ற எண்ணை தொடர்பு கொள்க
தம்மாம்: சவுதி அரேபியா இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் நிர்வாக குழு கூட்டம் 30.10.2015 அன்று தலைவர் காயல் அபூபக்கர் தலைமையில் தம்மாம் தலைமை நிலையத்தில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி அவதியுறும் தமிழர்களுக்கு போதிய வழிகாட்டல் ஆலோசனை வழங்கி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 5 பேர் கொண்ட உதவிக் குழு அமைக்கப்பட்டது.

உதவிக் குழு உறுப்பினர்களாக
சிஹாத் - சலாம் கான்
அல்ஜுபைல் - ஆசிக்
அல்கோபார் - முகம்மது நிவாஸ்
அல்ஹஸ்ஸா - முகம்மது அலி ஜின்னா
தம்மாம் - ஹபீப்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா செயல்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. பாதிப்புக்குள்ளாகும் தமிழர்கள் உதவி மையத்தின் அலைபேசி எண் 050 - 6232870 இதை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய தலைவர் முகம்மது வசீம்(கர்நாடகா),தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி(தமிழ்நாடு)ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிஹாத், கோபார், அல்ஹஸ்ஸா, அல் ஜுபைல், தம்மாம் உள்ளிட்ட கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications