தோண்ட தோண்ட தங்கம்.. அடுத்து பல ஆண்டுகளுக்கு வெட்டி எடுத்தாலும் தீராது! மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு
பியூனஸ் அயர்ஸ்: இந்த நவீனக் காலத்தில் தங்கத்தின் மீதான முதலீட்டை உலக நாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே உலகின் மிகப் பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் தேவை இப்போது தாறுமாறாக அதிகரித்து வரும் சூழலில் இது முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் தங்கம் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. கொரோனா, போர்கள், டிரம்ப் என இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். உலக நாடுகளுமே கூட தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துவிட்டது. மேலும், தங்க சுரங்கங்களும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

மிகப் பெரிய சுரங்கம்
இதற்கிடையே தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் ஒரு மிகப் பெரிய வளம் நிறைந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தென் அமெரிக்காவின் சுரங்கத் தொழிலை மொத்தமாக மாற்ற வாய்ப்பு இருக்கிறது. அர்ஜென்டினாவின் சான் ஜுவான் மாகாணத்திற்கும், சிலி நாட்டின் அட்டகாமா என்ற பிராந்தியத்திற்கும் இடையிலான எல்லையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி படிவுகளில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
தங்கம், வெள்ளி & காப்பர்
விகுனா கனிமப் படுகை (Vicuña Mineral Resource) என்று அழைக்கப்படும் இந்தத் தளத்தை லுண்டின் சுரங்கம் (Lundin Mining) மற்றும் பிஹெச்பி (BHP) நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருகிறது. இந்த இடத்தில் சுமார் 13 மில்லியன் டன் செம்பு (காப்பர்), 32 மில்லியன் அவுன்ஸ் தங்கம் மற்றும் 659 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி ஆகியவை இருக்கும் என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். அதன்படி பார்த்தால் இது உலகளவில் மிகப் பெரிய செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி படிவுகளில் ஒன்றாக இருக்கும்.
பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இருக்காது
இங்கு இரு முக்கிய செக்ஷன்கள் உள்ளன. அதில் ஃபிலோ டெல் சோல் (Filo del Sol) 1.14 சதவீதத்தில் 600 மில்லியன் டன்களுக்கு மேல் செம்பு தாது உள்ளது. அடுத்து ஜோஸ்மரியா (Josemaria) இங்கு 0.73 சதவீதத்தில் சுமார் 200 மில்லியன் டன்களுக்கு மேல் செம்பு தாது இருக்கிறது. சரியான முறையில் வெட்டி எடுக்கும் பணிகள் நடந்தால் அடுத்துப் பல ஆண்டுகளுக்கு இது சர்வதேச அளவில் இது முக்கியமான சுரங்கமாக இருக்கும்
இது குறித்து லுண்டின் சுரங்க நிறுவனத்தின் சிஇஓ ஜேக் லுண்டின் கூறுகையில், "விகுனா கனிமப் படுகை ஒரு முக்கியமான செம்பு சுரங்கமாக மட்டுமின்றி.. உலகின் மிகப்பெரிய தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கங்களில் ஒன்றாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
பொருளாதாரமே மாறும்
இந்தச் சுரங்கம் அர்ஜென்டினா பொருளாதாரத்தையே மாற்றிப்போடும். வேலைவாய்ப்புகள், வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் இது அர்ஜென்டினாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், க்ரீன் எனர்ஜி தொழில்நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனங்களில் செம்பு முக்கிய பங்கு வகிப்பதால், அர்ஜென்டினா உலக சந்தைகளில் ஒரு பெரிய சப்ளையராக உருவெடுக்கும்.
இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்கப் பொருளாதார வளர்ச்சியை அளிக்கும் என்ற போதிலும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள பழங்குடி குழுக்கள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் முக்கியம் என்றாலும் கூட அதனால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பூர்த்தி செய்யும்
அதையும் தாண்டி சுரங்கப் பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தச் சுரங்கம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரக் குறைந்தது சில ஆண்டுகளாவது ஆகும். இருப்பினும், இது எலக்ட்ரிக் வாகனங்கள் உட்படப் புதிய தொழில்நுட்பங்களுக்கு அதிகம் தேவைப்படும் செம்பை நமக்குத் தரும். மேலும், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் நிலையில், அதையும் பூர்த்தி செய்யும்.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
6 மாதத்தில் இல்லாத கொடுமை! தங்கம் விலை சடசடவென சரிவு! 6.3% வீழ்ச்சி.. வாங்க இது தருணமா? -
நாட்ல மழை இல்ல.. உங்க கையில மட்டும் எப்படி இவ்வளவு துட்டு! ரேட்டை ஏற்றிய ரோலக்ஸ்! ஆனாலும் ட்விஸ்ட்! -
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications