அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.4 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை
அர்ஜென்டினா: அர்ஜென்டினாவில் இன்ற திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான நிலையில் அர்ஜென்டினா மற்றும் சிலி பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் அவ்வப்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் நிலநடுக்கங்கள் லேசான பாதிப்பை தான் ஏற்படுத்துகின்றன. ஆனாலும் சில வேளைகளில் நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சமீத்தில் மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மியான்மர் அதிகமாக பாதிக்கப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.
இந்நிலையில் தான் இன்று அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் இன்று 7.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் பற்றிய விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் சார்பில், ‛‛தெற்கு அர்ஜென்டினாவின் உஷுவாயாவிலிருந்து 219 கி.மீ தெற்கே டிரேக் பாஸேஜில் உள்நாட்டு நேரப்படி 12:58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 என்று பதிவாகி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கடலில் பேரலைகள் எழுந்துள்ளன.
இதனால் சுனாமி எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அர்ஜென்டினா, சிலி ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் வார்னிங் செய்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications