ஆப்கன் ராணுவ மருத்துவமனையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்: 30 பேர் பலி
காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ மருத்தவமனைக்குள் புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் முஹம்மது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் வாசலில் திடீரென இன்று தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் நிலைகுலைந்தனர்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மருத்துவமனை வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் மேல் மாடியை நோக்கி முன்னேறி சென்று ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவர்கள் அணியும் கோட்டுகளை அணிந்தபடி, உள்ளே ஊடுருவி இருப்பதை கண்ட ராணுவ வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் வெளியானதும் அப்பகுதிக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனை அமைந்துள்ள பகுதி வழியாக இதர வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. உள்ளே பல தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் ஹெலிகாப்டர் மூலம் வந்த ராணுவ கமாண்டோ படையினர், கயிற்றின் மூலம் தொங்கியவாறு மொட்டை மாடிக்குள் குதித்தனர்.

தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அங்கே உச்சகட்ட மோதல் நடந்து வருவதாகவும், இந்த மோதலில் சுமார் 30 பேர் பலியாகியுள்ளதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்த முடியாத தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications