பாட்டியாகியும் அழகாய் ஜொலிக்கும் டிஸ்னி “ஹீரோயின்கள்”- வயதாக்கி அழகு பார்த்த பேஸ்புக் கலைஞர்!
நியூயார்க்: டைட்டானிக் படத்தில் ஹீரோயின் வயதாகி கதையை சொல்வது போல பிரபலமான கார்ட்டூன் கலைஞரான டிஸ்னியால் உருவாக்கப்பட்ட இளவரசிகள் முதுமையடைந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு ஓவியக் கலைஞர் யோசித்துள்ளார்.
இவர்களின் கதாபாத்திரங்களுக்கு படத்தில் சொல்லப்படும் வயது முதல் கணக்கிட்டு, அவர்களது தற்போதைய தோற்றம் எப்படியிருக்கும் என ஒரு கலைஞருக்கு யோசனை வந்தது.
இதனையடுத்து அவர்களை கணினி தூரிகைகள் மூலமாக பேஸ்புக்கில் பாட்டியாக்கி மகிழ்ந்துள்ளார் அந்த அற்புதமான கலைஞர்.

ஸ்னோ வொயிட்டுக்கு 92 வயதாம்:
கடந்த 1937 ஆம் ஆண்டு வெளிவந்த "ஸ்னோ வொயிட் அண்டு செவன் ட்வார்ஃப்ஸ்" படத்தில் ஸ்னோ வொயிட்டுக்கு 14 வயது. தற்போதோ 92.

சிண்ட்ரெல்லாவுக்கு 84:
கடந்த 1950 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் நாயகி சிண்ட்ரெல்லாவுக்கு 19 வயது. தற்போதோ அந்த அழகு தேவதை பார்ட்டிக்கு 84 பாட்டியின் வயது.

அரோராவுக்கு 72:
கடந்த 1959 ஆம் ஆண்டு வெளிவந்த "ஸ்லீப்பிங் பியூட்டி" படத்தில் இளவரசி அரோராவுக்கு பதினாறு வயது. தற்போதோ எழுபத்து இரண்டு.

மெர்மெய்டு ஏரியலுக்கு 42:
கடந்த 1989 ஆம் ஆண்டு வெளிவந்த "த லிட்டில் மெர்மெய்டு" படத்தில் ஏரியலுக்கு பதினாறு வயது. தற்போதோ நாற்பத்து இரண்டு.

பேரன், பேத்தி எடுக்கும் வயசு:
பியூட்டி அண்டு த பீஸ்ட் திரைப்படத்தில் வந்த இளவரசி பெல்லுக்கு 1991 ஆம் ஆண்டு பதினேழு வயது, தற்போதோ நாற்பத்து ஒன்று. 1992 ஆம் ஆண்டு வெளியான அலாதீன் படத்தின் நாயகியான ஜாஸ்மினுக்கு படத்தில் பதினைந்து வயது, தற்போதோ முப்பத்து எட்டு.

இவங்கதான் ஆன்ட்டி வயசில் இருக்காங்க:
இறுதியாக கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் சீனக் கதையான "ஃபா முலன்" நாயகி முலனுக்கு தற்போது முப்பத்து மூன்று வயது என நமது மனதுக்கு நெருக்கமான டிஸ்னி நாயகிகளை பேஸ்புக்கில் இந்த கலைஞர் மூப்படைய வைத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications