"மெகா பிரச்சினை.." ஆட்டம் காணும் சீனா? வேறுவழியின்றி எடுத்த அதிரடி முடிவு! கவனிக்கும் உலக நாடுகள்
பெய்ஜிங்: சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது மக்கள் தொகை பிரச்சினையைச் சரி செய்ய ஓரளவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் மக்கள் தொகை எப்போதும் பிரச்சினையாகவே இருந்துள்ளது. கடந்த 40, 50 ஆண்டுகளாக மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சினை என அவர்கள் கூறி வந்த நிலையில், இப்போது அது அப்படியே தலை கீழாக மாறியுள்ளது.

இத்தனை காலம் சீன அரசு மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக ஒரு குழந்தை திட்டத்தை அங்கே கடுமையாக அமல்படுத்தினர்.
அதாவது ஒரு குழந்தைக்கு மேல் பெற்றிருந்தால் அரசின் பல சலுகைகள் பறிக்கப்படும். அவ்வளவு ஏன் அரசு வேலைகளில் கூட சேர முடியாது. திருமணமாகாத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவும் தடை இருந்தது. மக்கள் தொகையால் பிரச்சினையைச் சந்திக்கும் மற்ற நாடுகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றாலும் மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனா இதைக் கடுமையாக அமல்படுத்தியது. இதனால், அங்கு மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தே வந்தது.
திட்டமிட்டபடி மக்கள் தொகை குறைந்து வருவது நல்லதுதானே.. அவர்கள் பிளான் வெற்றியடைந்துள்ளது தானே எனக் கேட்கலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இது அவர்களுக்குப் பிரச்சினையையே தரும். இப்போது அங்கு வேலை செய்யும் வயதில் இருக்கும் இளைஞர்கள் அதிகமாகவே உள்ளனர். இருப்பினும், அடுத்து வரும் காலத்தில் குழந்தை பிறப்பு தொடர்ந்து குறைந்தால், வேலை செய்யும் வயதில் உள்ள இளைஞர்களின் மக்கள் தொகை குறைந்து வயதான மக்கள் தொகை அதிகரிக்கும். இது அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
ஜப்பான் இப்போது இதே பிரச்சினையைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மக்கள்தொகையை அதிகரிக்கச் சீனா பல நடவடிக்கையை எடுத்து வருகிறது. அங்கு சில மாகாணங்களில் ஏற்கனவே திருமணமாகாத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள இருந்த தடை நீக்கப்பட்டது. சீன அரசு இப்போது மற்றொரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
அதாவது, குழந்தை பெற்றுக் கொள்ள உதவும் 16 வகையான மருத்துவச் சிகிச்சைக்கு அந்நாட்டு அரசு நிதியளிக்கும் என்று அறிவித்துள்ளது. இன்-விட்ரோ கருத்தரித்தல், கரு மாற்று அறுவை சிகிச்சை, உறைதல் மற்றும் விந்து சேமித்தல் ஆகியவை ஆகியவையும் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீன மக்கள் இந்த சிகிச்சைகளை எந்தவொரு செலவும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த 60 ஆண்டுகளில் சீன மக்கள் தொகை முதல் முறையாகச் சரிந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் குழந்தை பிறப்பு என்பது ஆண்டுக்கு 1,000 பேருக்கு 6.77 எனக் குறைந்துள்ளது. இது வரும் காலத்தில் மேலும் குறையும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே சீன அரசு இப்போது இந்த இலவச சிகிச்சை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், குழந்தை பிறப்பை அதிகரிக்கும் வகையில் சட்டங்களை மாற்றுவது குறித்த வழிகாட்டுதலை வழங்கியிருந்தது. அதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இருப்பினும், குழந்தை வளர்ப்பிற்கு அதிக நிதி தேவைப்படுவதால் இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் சீன அரசு மேலும் பல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications