அமெரிக்கா இல்லை என்றால் என்ன கனடா இருக்கிறது.. இந்தியர்களை வேலைக்கு அழைக்கும் கனடா அரசு!

வெளிநாட்டு மக்கள் கனடாவில் எளிதாக வேலை பெறும் வகையில் விசா நடைமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்தியர்களை வேலைக்கு அழைக்கும் கனடா அரசு!- வீடியோ

    டோரண்டோ: வெளிநாட்டு மக்கள் கனடாவில் எளிதாக வேலை பெறும் வகையில் அந்நாட்டு விசா நடைமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக நிறைய இந்தியர்கள் அங்கு எளிதாக வேலை வாங்க முடியும்.

    எச்-1பி விசாவுக்கு எதிராக அமெரிக்கா நிறைய சட்டம் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. தற்போது கனடாவின் இந்த செய்தி அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    இதன் காரணமாக இப்போதே பல இந்தியர்கள் கனடா நோக்கி படையெடுக்க சென்றுள்ளனர். இதன்முலம் ஒரே வாரத்திற்குள் கனடாவில் எளிதாக வேலை வாங்கிவிட முடியும்.

    முன்னுரிமை

    முன்னுரிமை

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ''அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்'' என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதன்படி எச்-1பி விசாவில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. எச்-1பி விசா வைத்து இருப்பவர்கள் அமெரிக்காவில் முன்பு போல சலுகைகள் பெற முடியாது. அதேபோல் புதிதாகவும் எச்-1பி விசா பெறுவது கடினமானது.

    பலருக்கு வேலை போகும்

    பலருக்கு வேலை போகும்

    அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பால் பலருக்கு வேலை போகும் அபாயம் ஏற்பட்டது. மேலும் அங்கு வேலைக்கு விண்ணப்பித்து இருந்த பலருக்கும் வேலை கிடைக்காமல் போனது. தற்போது சில நாட்களுக்கு முன்பு புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியானது. அதில் எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை பார்க்க அனுமதி கிடையாது என்று கூறப்பட்டு இருக்கிறது.

    கனடாவில் மாற்றம்

    கனடாவில் மாற்றம்

    அமெரிக்க வேலைக்காக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் இந்தியர்களை தற்போது கனடா தன் பக்கம் இழுத்து இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் திறமையான பணியாளர்களை தங்கள் நாட்டில் வந்து வேலை பார்க்கும்படி கனடா அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. இதற்காக விசா விதிமுறைகளிலும் நிறைய மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. 7 நாட்களில் வேகமாக வேலை வாங்கி விசா பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியர்கள் அதிகம்

    இந்தியர்கள் அதிகம்

    இந்த விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே பல இந்தியர்கள் அங்கு வேலை பெற்று இருக்கின்றனர். இதுவரை இந்த புதிய திட்டம் மூலம் அங்கு 988 இந்தியர்கள் வேலை பெற்று இருக்கின்றனர். 296 சீன மக்களும், 92 பிரான்ஸ் குடிமக்களும் அங்கு இதுவரை வேலை வாங்கியுள்ளனர். இதன்முலம் வேலையும் விசாவும் பெறுவது மிகவும் எளிதான காரியம் என்று கூறப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+