அயே.. அசிங்கமா கீதுபா உங்க தேசிய கீதம்.. ஜப்பானை வம்பிக்கிழுக்கும் சீன வீரர்!
இன்சியான்: வாய்க் கொழுப்பு படைத்தவர் என்று செல்லமாக வர்ணிக்கப்படும் சீனாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் சுன் யாங், ஜப்பானின் தேசிய கீதத்தை அசிங்கமாக இருக்கிறது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின்போதுதான் இந்த வாய்க் கொழுப்புப் பேச்சை பேசியுள்ளார் சுன் யாங்.
சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஏழாம் பொருத்தம், எப்போதும் ஆகாது, பரம்பரைப் பகை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஜப்பானைச் சீண்டுவது சீனர்களின் வழக்கம்.
இந்த நிலையில்தான் சுன் யாங் இப்படிப் பேசி பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார், தென் கொரியாவில் வைத்து.

2 முறை ஒலிம்பிக் சாம்பியன்
சுன் யாங் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கப் பதக்கம் வென்ற நீச்சல் சாம்பியன் ஆவார்.

ஆசிய விளையாட்டில் தங்கம்
இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 4x100 ப்ரீஸ்டைல் போட்டியில் சீனா தங்கம் வென்றது. இந்த அணியில் சுன் யாங்கும் இடம் பெற்றிருந்தார். ஜப்பான் இப்போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தது.

வம்புப் பேச்சு
பதக்கம் பெற்று முடித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் சுன் யாங் பேசுகையில், இன்று சீனர்கள் தங்களது கோபத்தை நன்றாகவே வெளி்ப்படுத்தலாம். பதக்க மேடையில் என்னால் நிற்கவே முடியவில்லை. ஜப்பான் தேசிய கீதம் கேட்கவே அசிங்கமாக இருக்கிறது என்றார் சுன் யாங்.

ராங்கு பிடித்த யாங்கு
யாங் எப்போதும் சேஷ்டையில் அதிகம் ஈடுபடுபவர். கடந்த ஆண்டு லைசென்ஸ் இல்லாமல் ஒரு காரை எடுத்துக் கொண்டு போய் பஸ்சில் மோதி பிரச்சினையை ஏற்படுத்திக் கைதானவர்.

பயிற்சியாளரை விமானத்தில் வைத்து அடித்தவர்
அதேபோல ஒருமுறை விமானத்தில் அணியினரோடு பயணம் மேற்கொண்டிருந்தபோது பணிப்பெண் ஒருவரிடம் ஜொள்ளு விட்டுப் பேசியதைக் கண்டித்த தனது பயிற்சியாளரை விமானத்திலேயே வைத்து சரமாரியாக அடித்து சர்ச்சையைக் கிளப்பியவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications