ID எங்கே? பாக்., ராணுவ தளபதி அசீம் முனீரை ஜெர்மனியில் தடுத்து நிறுத்திய அதிகாரி.. கேவலமா போச்சே
பெர்லின்: ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் பாகிஸ்தான் ராணுவ சீருடையில் சென்ற அந்த நாட்டின் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் அவமானப்படுத்தப்பட்டார். மாநாடு நடக்கும் இடத்துக்குள் நுழைய முயன்ற அவரிடம் ‛ஐடி எடு' என்று அதிகாரி கூறிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
ஜெர்மனியின் முனிச் நகரில் முனிச் பாதுகாப்பு மாநாடு நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவிலான பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பக இந்த மாநாடுகளின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விவாதிப்பார்கள்.

அந்த வகையில் நம் நாட்டில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்று பங்கேற்றுள்ளார். அமெரிக்கா உள்பட பிற நாடுகளின் அமைச்சர்கள், பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
பாக்., ராணுவ தளபதி அசீம் முனீர்
இந்த மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் வந்தார். அவர் மாநாடு நடைபெறும் இடத்துக்கு சென்றார். பாகிஸ்தானின் ராணுவ சீருடையில் அவர் முன்னே செல்ல.. அவருக்கு பின்னால் பிற அதிகாரிகள் வந்தனர்.
அனைவரும் தங்களின் அடையாள அட்டையை கழுத்தில் அணிந்திருந்தனர். ஆனால் அசீம் முனீர் அடையாள அட்டை இல்லாமல் இருந்தார்.
ஐடி கேட்ட அதிகாரி
அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், அசீம் முனீரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கூறினார். மாநாட்டின் நுழைவாயிலில் இருந்த அதிகாரி ஒருவர், ‛நில்லுங்கள்.. உங்களின் ஐடி கார்டு எங்கே'' என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு அசீம் முனீரின் பின்னால் வந்த இன்னொரு ராணுவ அதிகாரி தனது கையில் இருந்த அசீம் முனீரின் அடையாள அட்டையை எடுத்து காண்பித்தார். இதையடுத்து அவர்கள் மாநாடு நடக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்றனர்.
Asim Munir at the Munich Security Conference
— THE CIVIC SENSE (@NarendraBi22548) February 15, 2026
😅
This is how unprofessionalism treated outside your country.
That one was personal - ‘can you turn that around ‘ in the last 😭😭#AsimMunir #INDvsPAK pic.twitter.com/unRJuNattc
அவமானப்படுத்திட்டிங்களே
அப்போதும் தன்னிடம் ஐடி கார்டு கேட்ட அதிகாரியை அசீம் முனீர் ‛அவமானப்படுத்திட்டிங்களே’ என ஒரு நொடி திரும்பி பார்த்து சென்றுள்ளார்.இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
பாகிஸ்தானின் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் அவமானப்பட்டுள்ளதாகவும்,அசீம் முனீரை உலகில் யாருக்கும் தெரியவில்லை. இதுதான் பாகிஸ்தானின் நிலைமை என்று கூறி வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்த மக்கள் சிலரே அசீம் முனீரை ட்ரோல் செய்து வருகின்றனர். இருப்பினும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் இப்படி வெளிநாடுகளில் அவமானப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
அசீம் முனீருக்கு எதிராக போராட்டம்
மேலும் இந்த மாநாட்டில் அசீம் முனீர் பங்கேற்றதற்கு ஜெர்மனியில் செயல்பட்டு வரும் சிந்தி அரசியல் அமைப்பான ஜெய் சிந்து முத்தாஹிதா மஹாஸ் (JSMM) அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முனீர் பாதுகாப்பு மாநாடு மிகவும் முக்கியமானது.
இந்த மாநாட்டில் அசீம் முனீரை பங்கேற்க அனுமதித்து இருக்க கூடாது. அவரை வெளியேற்ற வேண்டும் என்று மாநாட்டு வளாகத்துக்கு வெளியே அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது பாகிஸ்தானுக்கு நேர்ந்த அவமானமாக பார்க்கப்படுகிறது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications