உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில்.. தொடங்கியது அதிபர் தேர்தல்..முறைகேடுகளை ஆரம்பித்த அதிபர் ஆசாத்?
டமாஸ்கஸ்: பல ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Recommended Video
கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் வாக்களிக்க 12 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிரியா அதிபர் தேர்தல்
பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை வாக்களிக்கலாம். தேர்தல் முடிவுகள், வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்தில் அதாவது வெள்ளிக்கிழமை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் அதிபர் ஆசாத் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல்லா சலூம் அப்தல்லா, மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் அகமது மரே ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர்

உலக நாடுகள் கருத்து
இருப்பினும், இந்தத் தேர்தல் வெறும் கண் துடைப்பிற்கு நடத்தப்படும் தேர்தல் என்றும் ஆசாத் அதிபர் பதவியில் இருக்கும் வரை தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்றும் பிரான்ஸ். ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

சிரியா அதிபர் ஆசாத்
சிரியா அதிபர் ஆசாத், அவரது தந்தையின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் அதிபரானார். அதன் பிறகு நடைபெற்ற அனைத்து அதிபர் தேர்தல்களிலும் ஆசாத் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தேர்தலில் முறைகேடுகளை நடத்தியே அவர் வெற்றி பெற்றதாகவும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

உள்நாட்டுப் போர்
கடந்த 2011ஆம் ஆண்டு ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகப் பெரியளவில் திரண்டு, அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர். அவர்களை ராணுவத்தின் துணையுடன் மிகவும் மூர்க்கமான முறையில் ஒடுக்கினார் ஆசாத். அப்போது முதலே சிராயாவில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெறுகிறது. அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் 3.88 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications