வா வா எங்கள் தேவதையே! பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்..கருவை போல சுமந்து வந்த டிராகன்! சாதித்த நாசா
நியூயார்க்: விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) இன்று டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார். திட்டமிட்டபடி அதிகாலை 3.27 மணிக்கு டிராகன் விண்கலத்தின் கேப்சூல் ஃப்ளோரிடா கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலத்தின் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார்.
10 நாள் ஆய்வுக்குப் பிறகு பூமிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர் பூமி திரும்ப முடியவில்லை. பல முயற்சிகள் பலனளிக்காத நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஸ்டார் லைனர் மட்டுமே பூமிக்கு திரும்பியது.


தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி நடந்த முயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், ரஷ்யாவின் அலக்சாண்டர் உள்ளிட்ட ஏழு பேர் அங்கு தங்கி இருந்தனர். இந்த நிலையில் 286 நாட்கள் விண்வெளியில் சிக்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸை மீட்க எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன் வந்தது. தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்தது.
அதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்ற நிலையில் நேற்று முன்தினம் அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்தது. தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு இந்திய நேரப்படி நேற்று காலை 10:35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது. அதில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்பனூர் ஆகியோர் டிராகன் விண்கலத்தின் கேப்சூலில் அமர்ந்தனர்.

(photo courtesy: NASA)
தொடர்ந்து அவர்கள் தயாரானதும் நாசா திட்டமிட்டபடி 10:35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்தது. தொடர்ந்து சுமார் 17 மணிநேர பயணத்தை தொடர்ந்த நிலையில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடைந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம்.

சுமார் 3.15 மணியளவில் அதிவேகமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. அப்போது சுமார் 1600 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏற்பட்ட நிலையில் அதீத வெப்பத்தை காக்கும் கவசங்கள் விண்கலத்தையும் வீரர்களையும் காப்பாற்றியது. தொடர்ந்து வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் டிராகன் விண்கலத்தின் வேகம் தானாகவே குறைந்த நிலையில் நான்கு பெரிய பாராசூட்கள் விரிந்தது. தொடர்ந்து டிராகன் விண்கலம் தனது வேகத்தை குறைத்து கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
அதை அடுத்து அங்கிருந்த மீட்பு குழுவினர் விண்கலத்தின் கேப்சூலை மீட்டு வீரர்களை பத்திரமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு பிறகு அவர்கள் பொதுவெளியில் பேச உள்ளனர். டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை நாசா உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பியது. கோடிக்கணக்கானோர் அந்த நிகழ்வை பார்த்து உற்சாகம் பொங்க அவர்களை வரவேற்றனர். மேலும் தரையிறங்கும் நிகழ்வை ஏராளமானோர் சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் செய்து பார்த்து ரசித்தனர்.
PROMISE MADE, PROMISE KEPT: President Trump pledged to rescue the astronauts stranded in space for nine months.
— The White House (@WhiteHouse) March 18, 2025
Today, they safely splashed down in the Gulf of America, thanks to @ElonMusk, @SpaceX, and @NASA! pic.twitter.com/r01hVWAC8S












Click it and Unblock the Notifications