ஹலோ இது பூமியா? : விண்வெளி வீரரிடம் இருந்து வந்த போனால் பெண் அதிர்ச்சி !

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள இங்கிலாந்து விண்வெளி வீரர் டிம் பீக் (43).இவருக்கு ரெபேகா என்ற மனைவியும், தாமஸ், ஆலிவர் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு போன் செய்துள்ளார் டிம் பீக். ஆனால் தவறான தொலைபேசி எண்னை டயல் செய்துவிட்டார். இவரது அழைப்பை ஒரு பெண் எடுத்துள்ளார்.

Astronaut Tim Peake calls wrong number from space station

அந்த பெண்ணிடம் தன் குடும்ப நபர்களின் பெயர்களை சொல்லி அவர்கள் இருக்கிறார்களா என்று கேட்பதற்கு பதிலாக ஹலோ இது பூமி கிரகமா? என்று கேட்டு அந்த பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். பின்னர் தான் தவறுதலாக போன் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள டிம் பீக், அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளார். விளையாட்டாக அழைக்கவில்லை தவறுதலாக அழைத்ததாக விளக்கம் அளித்து அந்த முகம் தெரியாத பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிம் பீக்.

டிம் பீக் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+