28 வயது எலியனார் காட்டனுக்கு மேன் புக்கர் விருது
லண்டன்: மேன் புக்கர் விருது இளம் வயது பெண் எழுத்தாளரான எலியனார் காட்டனுக்குக் கிடைத்துள்ளது. இந்த விருதைப் பெறும் மிகவும் இளைய எழுத்தாளர் இவர்தான்.
தி லுமினரிஸ் என்ற அவரது நூலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. 19ம் நூற்றாண்டின் நியூசிலாந்தை பின்னணியாக வைத்து இந்த நூலை எழுதியுள்ளார் எலியனார்.

எலியனார் கனடாவில் பிறந்தவர். நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் வளர்ந்தவர். இங்கிலாந்தின் பிரபலமான இலக்கிய விருதுதான் இந்த மேன் புக்கர் விருது. வருடந்தோறும் சிறந்த நாவலாசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பெறத் தகுதியானவர்கள் இங்கிலாந்து, அயர்லாந்து அல்லது காமன்வெல்த் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேன் புக்கர் விருது பெறும் மிகவும் இளைய வயது எழுத்தாளர் என்ற பெயர் எலியனாருக்குக் கிடைத்தது போல அவர் எழுதிய நூலுக்கும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. அதாவது மேன் புக்கர் விருது பெறும் மிக நீள்மான புத்தகம் என்ற பெயர்தான் அது. எலியனாரின் நூல் மொத்தம் 848 பக்கங்களைக் கொண்டதாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications