குழாயில் உடைப்பு: அமெரிக்க தெருவில் முழக்கால் அளவுக்கு ஓடிய ஆயில்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பைப் உடைந்து சுமார் இரண்டு லட்சம் லிட்டர் அளவுக்கு குரூட் ஆயில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் முக்கியமான நகரங்களில் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ். அமெரிக்க நேரப்படி நள்ளிரவு, 12.15 மணிக்கு கிளன்டேல் என்ற இடத்தின் அருகே குரூட் ஆயில் செல்லும் பைப்பில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. 20 இன்ச் அகலம் கொண்ட அந்த பைப் உடைந்ததில் அதற்குள் சென்றுகொண்டிருந்த ஆயில் வெளியே சிதறி வீதியில் ஓடத்தொடங்கியது.

ஒரு கட்டத்தில் ஆயில் லீக்கேஜ் மிக அதிகரித்து, முழங்கால் அளவுக்கு சாலையில் ஓடத்தொடங்கியது. சிகரெட் துண்டில் இருந்து நெருப்பு அதில் விழுந்தாலும் தீ மளமளவென பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் பீதி நிலவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆயில் சப்ளையை நிறுத்தினர். அதற்குள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு எண்ணை ஓடத்தொடங்கியிருந்தது. வெளியேறிய ஆயில் அளவு சுமார் 2 லட்சம் லிட்டர்கள் வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதன்பிறகு எண்ணையை வழித்தெடுக்கும் பணி தொடங்கியது. அதிருஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. இச்சம்பவத்தால் நள்ளிரவு வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications