சிரியாவில் அமெரிக்காவின் அதிரடி குண்டு மழை.. ஒரே நாளில் 70 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் காலி!
பெய்ரூட்: அமெரிக்க விமானப்படையினர் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது நடத்திய அதிரடி குண்டு வீச்சில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க விமானப்படையினர் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர். இதில்தான் இத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை சிரியா போர் குறித்த தகவல்களை கவனித்து வரும் மனித உரிமை அமைப்பான சிரியா அப்சர்வேட்டரி பார் ஹியூமன் ரைட்ஸ் என்ற அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் ரமி அப்துல் ரஹ்மான் கூறுகையில், உயிர்ப்பலி மேலும் அதிகமாக இருக்கும் என்றே கருதுகிறோம். 70 என்பது குறைந்ததுதான், உண்மையில் இதை விட அதிக அளவிலான தீவிரவாதிகள் பலியாகியிருப்பார்கள் என்று கருதுகிறோம் என்றார்.
ரக்கா, டெயர் அல் ஸோர், ஹஸகா ஆகிய பகுதிகளில்தான் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளை தீவரவாதிகள் தான் தங்களது வசம் வைத்துள்ளனர்.
மேலும் காயமடைந்தோர் எண்ணிக்கை 300க்கு மேல் இருக்கும் என்றும் ரமி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications