புளோரிடா சர்வதேச பல்கலை. அருகே மேம்பாலம் இடிந்து விபத்து- 6 பேர் பலி
புளோரிடாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைக் கழகம் அருகே 950 டன் எடையுள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
புளோரிடா பல்கலைக் கழகத்தை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை பொதுமக்கள் கடப்பதற்கு வசதியாக அண்மையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்த 950 டன் எடையுள்ள மேம்பாலம் திடீரென நேற்று இடிந்து விழுந்தது. அப்போது சாலையில் சென்ற வாகனங்கள் இந்த இடிபாடுகளில் சிக்கின.
இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications