விமானத்தை சுட்டு வீழ்த்தும் சதித் திட்டம்.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு
சிட்னி: விமானத்தை சுட்டு வீழ்த்தும் சதித்தி ட்டத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய போலீஸார் அது தொடர்பாக 4 பேரைக் கைது செய்து அந்தத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளனர்.
சிட்னி புறநகரான சர்ரி ஹில்ஸ் புறநகர்ப் பகுதியில் இந்த கைதுச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டு வந்ததும், அதுதொடர்பான கருவிகள் இருப்பதையும் போலீஸார் கண்டறிந்து அவற்றை முறியடித்துள்ளதாக பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகளுக்கும் ஏகப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சர்ரி ஹில்ஸ் தவிர லகேம்பா, வைலி பார்க், பன்ச்பவுல் ஆகிய சிட்னி புறநகர்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அவர்களில் ஒருவரின் மனைவி கூறுகையில், தனது கணவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் கமிஷனர் ஆண்ட்ரூ கால்வின் கூறியுள்ளார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications