நிலவில் சந்திரயான் 3.. ஆஸ்திரேயா டூ இந்தியா! பறந்து வந்த டேவிட் வார்னரின் ‛நச்’ வாழ்த்து! சூப்பர்
சிட்னி: நிலவின் தென்துருவத்தில் நேற்று வெற்றிகரமாக சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலையில் ஆஸ்திரேலியா அணியின் வீரரான டேவிட் வார்னர் க்யூட்டாக இந்தியாவுக்கு வாழ்த்து கூறி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். ஒருகாலத்தில் டேவிட் வார்னர் தனது ஆக்ரோஷத்தால் எதிரணி வீரர்களை சீண்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் தனது ஆக்ரோஷத்தை முற்றிலுமாக கைவிட்டு கூலாக கிரவுண்ட்டில் வலம் வருகிறார்.

இந்த மாற்றத்தால் வார்னருக்கு இந்தியாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் என்பது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாகும். ஐபிஎல்லில் இதற்கு முன்பு ஹைதராபாத் அணிக்கு விளையாடிய வார்னர் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்தியர்களுக்கு டேவிட் வார்னரை பிடிக்க இன்னொரு காரணம் என்னவென்றால் அவரது குறும்புத்தனம் தான். அதாவது இந்தியாவில் பிரபலமாகும் டயலாக், பாடல்களுக்கு வார்னர் தனது குடும்பத்துடன் நடனமாடி இன்ஸ்டாவில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இதன்மூலம் டேவிட் வார்னருக்கு இந்தியாவின் பட்டித்தொட்டி எங்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் நேற்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. இதற்கு டேவிட் வார்னர் நச்சுன்னு ஒரே வரியில் வாழ்த்து கூறி இந்தியர்களின் மனதை கவர்ந்துள்ளார். இதுதொடர்பாக டேவிட் வார்னர் தனது ட்விட்டர் பதிவில், ‛‛இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, வெல்டன் இந்தியா'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிலவின் தென்துருவத்தில் கால்பதிக்க இந்தியா சந்திரயான் 3 திட்டத்தை உருவாக்கியது. இதையடுத்து பிஎஸ்எல்வி எல்விஎம் 3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் என்பது உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவற்றை சுமந்து சென்றது.

உந்து விசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதோடு, நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
மேலும் விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வாகனம் வெளியே வந்து ஆராய்ச்சியை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவுக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னரும் இந்தியாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications