800 வருடங்களில் இல்லாத வறட்சி.. பாலைவனமாகும் நகரம்.. இதுதான் இப்போதைய ஆஸ்திரேலியா!
உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரை இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறுமையும் , வறட்சியும் ஏற்பட்டு இருக்கிறது.
சிட்னி: உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரை இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறுமையும் , வறட்சியும் ஏற்பட்டு இருக்கிறது.
பொதுவாக இந்திய மக்களுக்கு ஆஸ்திரேலியர்களின் விளையாட்டு திறமையும், கங்காரும் மட்டுமே ஆஸ்திரேலியா என்று கூறியதும் நியாபகம் வரும். ஆனால், உண்மையில் தற்போதைய ஆஸ்திரேலிய நிலை மிக மிக மோசமாக இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா எப்படி மோசமான நீர் வறட்சியை சந்தித்து இருக்கிறதோ அதே அளவிற்கு மோசமான வறட்சியை சந்தித்து இருக்கிறது, ஆஸ்திரேலியா. இதை பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

வரலாற்று வெயில்
உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரை இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் வறட்சி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆவணங்களின் படி, கடந்த 800 வருடங்களில் அங்கு ஏற்பட்ட வறட்சியிலேயே இதுதான் மிகவும் மோசமான வறட்சி என்று கூறப்படுகிறது. கடந்த 30 மாதங்களாக அங்கு மிக கடுமையான வெயில் அடிக்கிறது.

22 மாதமாக மோசம்
கடந்த 22 மாதமாக அங்கு கொஞ்சம் கூட மழை பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 95 சதவிகித கிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் எல்லாம் மோசமாக வறட்சியை சந்தித்து காய்ந்து போய்விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அங்கு நிலத்தடி நீர் 1000 அடிகளுக்கு கீழ் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

வீழ்ச்சி
இதனால் அங்கு பொருட்களின் விலை மிகவும் அதிகம் ஆகியுள்ளது. அதேபோல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் பங்கு வர்த்தகம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.

வைரல்
ரியூட்டர்ஸ் பத்திரிக்கையின் புகைப்படக்காரர் டேவிட் கிரே எடுத்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. ஆஸ்திரேலிய வறுமையை அவர் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications