இனி 16+ வயதினருக்கு மட்டுமே சோஷியல் மீடியா! கடிவாளம் போடும் ஆஸ்திரேலியா! ஆனால் ஒரு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

கான்பரா: உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியா சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வயதை 16ஆக உயர்த்த உள்ளது. இப்போது அங்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் குறைந்தபட்ச வயது 13ஆக இருக்கிறது. அதை 16ஆக உயர்த்தும் சட்டத்தை அடுத்த வாரம் கொண்டு வர உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நவீனக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் நம்மை ஆக்கிரமித்துவிட்டது. நேர் உலகில் 10 நல்ல நண்பர்கள் இருப்பதைக் காட்டிலும், சமூக வலைத்தளங்களில் எவ்வளவு பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இளை தலைமுறையினர் முக்கியத்துவம் தருகிறார்கள்.

Australia to Ban Social Media Access for Children Under 16 New Policy Proposal

பள்ளி மாணவ, மாணவிகள் கூட பல மணி நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் படிப்பு மட்டுமின்றி, பழக்கங்களும் கூட பாதிக்கப்படுகிறது.

சிக்கல்: இது தொடர்பாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மன ரீதியான மோசமான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிய வந்தது. மேலும், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் ஆய்வில் கூறப்பட்டது. குறிப்பாக வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு தாங்கள் யார் என்பதை அடையாளம் காணும் Identity developmentல் கூட பாதிப்பு ஏற்படும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது 11 - 15 வயதில் உள்ளவர்கள் அதிகளவில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது அவர்கள் சுய அடையாளத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன யோசிப்பார்கள் என்பதற்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். மேலும், இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் மனது விமர்சனத்தை ஏற்கும் அளவுக்குப் பக்குவப்பட்டு இருக்காது என்பதால் மன பாதிப்பு மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குறைந்தபட்ச வயது: தற்போதைய சூழலில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என கிட்டதட்ட எல்லா நாடுகளிலும் சமூக வலைத்தளங்களை 13 வயதாகி இருந்தாலே பயன்படுத்த முடியும். இதுவே சிக்கலுக்கு அடிப்படை காரணம் என்பதால் குறைந்தபட்ச வயதை 16ஆக உயர்த்துமாறு ஆஸ்திரேலியாவில் கோரிக்கை எழுந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த கோரிக்கை எழுந்த நிலையில், அதற்கு நல்ல ஆதரவும் கிடைத்தது.

ஆஸ்திரேலிய அரசு: இதனிடையே ஆஸ்திரேலிய அரசு இப்போது ஒரு வழியாக இந்தச் சட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது. உலகளவில் இதுபோல சட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும். அடுத்த வாரம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டம் முன்வைக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளைத் தடுப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் உள்ள பல லட்சம் தாய், தந்தைகளை மனதில் வைத்துக் கொண்டு வரப்படும் சட்டம் இது.. என்னைப் போலவே அவர்களும் ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அரசு எப்போதும் உங்கள் நலனில் அக்கறை கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

ஒரே ஒரு சிக்கல்: இந்த சட்டம் குறித்து வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இருப்போருக்கு இந்த தடை பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இருப்போருக்கும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+