5 மாதத்தில் 2 முறை சிலந்திப்பூச்சியிடம் 'அங்கேயே' கடி வாங்கிய வாலிபர்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் 21 வயது வாலிபர் 5 மாதத்தில் இரண்டு முறை சிலந்திப்பூச்சியிடம் அதுவும் ஆணுறுப்பில் கடிவாங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் பணிபுரிபவர் ஜோர்டன்(21). அவர் கடந்த ஏப்ரல் மாதம் பணி நடக்கும் இடத்தில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றபோது ரெட்பேக் எனப்படும் விஷமுள்ள சிலந்திப்பூச்சி அவரை ஆணுறுப்பில் கடித்தது.

வலியால் துடித்து அலறிய அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரெட்பேக் சிலந்திப்பூச்சி கடித்து உயிர் இழந்தவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் உள்ள கழிவறைக்கு ஜோர்டன் சென்றுள்ளார். பூச்சி ஏதாவது இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துவிட்டு டாய்லெட் சீட்டில் உட்கார்ந்துள்ளார்.
மறுபடியும் ஆணுறுப்பில் ஏதோ கடித்ததை உணர்ந்த அவர் அலறியடித்து பார்த்தால் மீண்டும் சிலந்திப்பூச்சி. இம்முறை வலியால் துடித்த அவரை பார்த்து சக ஊழியர்கள் வருத்தப்படாமல் கிண்டல் செய்து சிரித்துள்ளனர்.
ஜோர்டன் அருகில் உள்ள பிளாக்டவுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்த உலகத்திலேயே நான் தான் துரதிர்ஷ்டசாலி. இல்லை என்றால் 5 மாதத்தில் 2 முறை ஆணுறுப்பில் சிலந்தியிடம் கடி வாங்கியிருப்பேனா என கவலையுடன் தெரிவித்துள்ளார் ஜோர்டன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications