பேறுகாலத்தில் திடீர் ட்விஸ்ட்.. ஆண் குழந்தை பிறந்ததால் அதிர்ச்சியான தாய்! வைரலாகும் போட்டோ
கான்பெரா: வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று ஸ்கேன் செய்யும் ஊழியர்கள் கூறியிருந்ததை நம்பிக்கொண்டிருந்த பெண்மணி, தனது பேறுகாலத்தின்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதை கேள்விப்பட்டு பேரதிர்ச்சி கொண்டுள்ளார். இந்த ஷாக்கிங் முகபாவனை உலகமெங்கும் வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடோ நகமுரா மற்றும் அவரது கணவர் நியாகன்சபி, ஆகியோர் தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை சில தினங்கள் முன்பு சந்தித்தனர்.
அந்த சர்ப்ரைஸ் மொமண்ட், உலகம் முழுக்க தங்களை பிரபலப்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று சமூக வலைத்தளங்களில் அவர்களை பற்றிய பேச்சுதான்.

பெண் குழந்தை
கருவுற்றிருந்த நகமுரா டாக்டர்கள் அறிவுரைப்படி அவ்வப்போது ஸ்கேன் செய்து பார்த்து வந்தார். குறிப்பிட்ட மாதங்கள் கடந்ததும், வயிற்றில் உள்ளது பெண் குழந்தை என்று ஸ்கேன் மையத்தில் உள்ள டாக்டர் 'கண்டுபிடித்து', அதை நகமுராவுக்கு கூறினார்.

உடுப்புகள்
பெண் குழந்தையை வரவேற்க தயாரான தம்பதிகள், சிறுமிகளுக்கு பிடித்த பிங்க் வண்ணத்தில் குட்டி குட்டி உடுப்புகளை வாங்கி குவித்தனர். தங்கள் குட்டி தேவதைக்கு, ஹினாடா என்று பெயரை தேர்வு செய்தும் ரெடியாக இருந்தனர்.

ஆண் குழந்தை
அண்மையில், ஒரு சுபயோக சுபதினத்தில், நகமுராவுக்கு பேறுகால வலி வந்தது. மருத்துவமனையில் தாயையும், சேயையும் நலமாக பிரித்து எடுத்தனர் டாக்டர்கள். குழந்தை பிறந்த சேதியை சொன்னதும், தம்பதிகள் துள்ளி குதிப்பார்கள் என நினைத்த டாக்டர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

ப்ப்பா.. என்னா ஷாக்
"உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது" என்று டாக்டர் சொன்னதும்தான் தாமதம், அப்படி ஒரு அதிர்ச்சி தகவலை கூறிவிட்டதை போல நகமுரா ஷாக் ஆனார். அவரது ரியாக்ஷனை பார்த்து டாக்டர்களும் ஷாக் ஆகினர். ஆஸ்பத்திரி முழுக்க ஒரே ஷாக் மயம்தான்.

இயல்பு நிலை
ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்காத நகமுரா அதன்பிறகு தனது அதிர்ச்சியை அடக்கிக்கொண்டு, ஸ்கேன் மையத்து ஊழியர்களை வாய்க்குள் கரித்து கொட்டியபடி, தனது அன்பு மகனை கொஞ்சினார். தம்பதிகள் தங்கள் மகனுக்கு தைகா என பெயரிட்டுள்ளனர்.

வைரல் போட்டோ
இந்த காட்சியை பேறுகால போட்டோகிராபரான ஜெஸ்சிகா ஜாக்ஷன் தனது காமிராவில் கிளிக்கி அதை இன்ஸ்டாகிராமில் வெளியி்டடார். அந்த ஷாக் போட்டோதான் இப்போது வைரலாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications