For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர் ஸ்டார் அமிதாப் பேரில் உதவித்தொகை - ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நேற்று தொடங்கியது.

நட்சத்திரத் திருவிழாவான இந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி வைத்தார்.

அவருடன் அவரது மனைவி மற்றும் கவர்னர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமிதாப் கல்வி உதவித்தொகை:

அப்போது ஆஸ்திரேலியாவின் "லா ட்ரோப் பல்கலைக்கழகம்" அவரது பெயரில் மாணவர்களுக்கான கல்வி

Australian university names scholarship after Amitabh Bachchan

உதவித்தொகையை அளிக்கவிருப்பதாக அறிவித்தது.

மகிழ்ச்சி அடைந்த அமிதாப்:

இந்த செய்தி குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்ட அமிதாப் பச்சன் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இருந்து ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு படிப்புகளுக்கு வரும் தகுதியுடைய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படல் வேண்டும் என்றார்.

40 திரைப்படங்கள்:

மேலும், தன்னை இந்தத் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு அழைத்த விக்டோரியா மாகாண அரசிற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். 11 நாள் நடைபெறும் இந்த விழாவில் மொத்தம் 40 திரைப்படங்கள் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் நல்லுறவு:

உள்ளூர் மக்களுக்கு இந்தியத் திரைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவை விக்டோரியா மாகாணம் வளர்த்து வருகின்றது. இந்த அரவணைப்பும், கருணையும் இந்திய மக்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.

சாதனையாளர்கள் விருது:

இறுதியில் குறும்படங்களில் இருந்து தொடங்கி அனைத்துப் பிரிவுகளிலும் தேர்வு செய்யப்படும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவது சிறப்பாகும் என்று இந்நிகழ்ச்சி பற்றி அமிதாப்பச்சன் தனது இணையதளத்தகவலில் வெளியிட்டுள்ளார்.

English summary
Megastar Amitabh Bachchan, who inaugurated the Indian Film Festival Melbourne (IFFM) along with the governor and his wife on Thursday, is ecstatic to hear that the La Trobe University has named a scholarship after him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X