200 கிலோ ஐஸ்கட்டிகள்.. இரண்டரை மணி நேரம்.. ஐஸ்பெட்டிக்குள் ஒரு சாதனை.. அசர வைக்கும் ஆஸ்திரியா மனிதர்
ஆஸ்திரியாவை சேர்ந்த ஜோசப் கோபெர் என்பவர் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட தொட்டியில் இரண்டரை மணி நேரம் அமர்ந்து சாதனை படைத்திருக்கிறார்.
வியன்னா: ஆஸ்திரியாவில் இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக சுமார் 200 கிலோ ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட தொட்டியில் அமர்ந்து தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளார் ஜோசப் கோபெர்.
பிரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து சும்மா ஒரு நிமிடம் கையில் வைத்திருந்தாலே நமது கை மரத்துப் போய்விடும். ஆனால் ஆஸ்திரியாவை சேர்ந்த ஒருவர் ஐஸ் கட்டிகளை வைத்து பல சாதனைகள் படைத்து அசரடித்து வருகிறார்.
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர் ஜோசப் கோபெர். இவருக்கு ஐஸ் கட்டிகள் தான் மெத்தை போலும்.

சாதனை
கடந்த 2019ம் ஆண்டு 30 நிமிடங்கள் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட பெட்டியில், தலையை தவிர உடல் முழுவதையும் அமர்த்தி சாதனை படைத்தார் அவர். இது நடந்த இடம் லோயர் ஆஸ்திரியாவின் டவுன் ஸ்கோயர் ஆஃப் மெல்க் எனும் பகுதி.

புதிய சாதனை
தற்போது அவர் அந்த சாதனையை முறியடித்த புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இந்த முறை 200 கிலோ ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட தொட்டியில் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 57 நொடிகள் தலையை தவிர உடல் முழுவதையும் அமர்த்தி அனைவரையும் அசரடித்து இருக்கிறார்.

பாராட்டு
"நேர்மறையான சிந்தனைகள் மற்றும் சித்திரங்களை கற்பனை செய்து எனது வலிக்கு எதிராக நான் போராடுகிறேன். இதன் மூலம் எனது வலியை என்னால் தணிக்க முடிகிறது", என்கிறார் ஜோசப். ஐஸ் கட்டிகள் கொடுக்கும் வலியை தாங்கும் அவரது அசாதாரமான திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

வாழ்த்துக்கள்
தனது இந்த சாதனையை மீண்டும் முறியடித்து இன்னும் அதிக நேரம் ஐஸ் கட்டிகளில் அமர்ந்திருக்க போவதாக தெரிவித்துள்ளார் ஜோசப். இந்த சாதனையை அடுத்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்ச்சி காட்ட திட்டமிட்டிருக்கிறார். வலியை வெல்லும் இந்த ஐஸ் மனிதரின் வெற்றி பயணம் தொடர நாமும் வாழ்த்துவோம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications