மறுபடியும் "ஆரம்பிச்சுட்டாரு" கிளிண்டன்.. பரபரப்பைக் கிளப்பும் புத்தகம்

Subscribe to Oneindia Tamil

பிலடெல்பியா: முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தனது மனைவி ஹில்லாரி வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பணிப்பெண்ணுடன் ஜாலியாக இருப்பதாக பரபரப்புத் தகவலைக் கிளப்பியுள்ளார் புத்தக ஆசிரியர் ரொனால்ட் கெஸ்லர்.

இவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளஆர். அதில் சில முன்னாள் அதிபர்கள் குறித்த பரபரப்புத் தகவல்களை போட்டு நிரப்பியுள்ளார். இது அமெரிக்காவில் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

The First Family Detail: Secret Service Agents என்ற பெயரிலா அந்தப் புத்தகத்தில் அமெரிக்க அரசின் ரகசிய ஏஜென்டுகள் பல முக்கிய ரகசியங்களை வெளியில் வராமல் அமுக்க விடுவதாகவும் சாடியுள்ளார் கெஸ்லர்.

மாறலையே கிளிண்டன்

மாறலையே கிளிண்டன்

அவர் கிளிண்டன் குறித்த ஒரு பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். கிளிண்டன் வீட்டில் ஒரு அழகான, கவர்ச்சிகரமான பணிப்பெண் இருப்பதாகவும், அவருடன் கிளிண்டன் நெருக்கமாக இருப்பதாகவும் போட்டுக் கொடுத்துள்ளார் கெஸ்லர்.

கிளிண்டனின் எனர்ஜைசர்

கிளிண்டனின் எனர்ஜைசர்

இதுகுறித்து கெஸ்லர் கூறுகையில் அந்தப் பெண் மிகவும் கவர்ச்சிகரமானவர். அழகானவர். அவருக்கு எனர்ஜைசர் என்று ரகசிய ஏஜென்டுகள் பெயர் வைத்துள்ளனர்.

வீட்டுக்காரம்மா வீட்டில் இல்லாத நேரத்தில்

வீட்டுக்காரம்மா வீட்டில் இல்லாத நேரத்தில்

கிளிண்டன் தனது மனைவி ஹில்லாரி வீ்ட்டில் இல்லாத நேரத்தில் இந்தப் பெண்ணுடன் நெருங்கிப் பழகுகிறார்.

ஹில்லாரி இல்லாவிட்டால் போதும்

ஹில்லாரி இல்லாவிட்டால் போதும்

ஹில்லாரி வீட்டை விட்டு வெளியேறி விட்டால் போதும், கிளிண்டனும் இவரும் சேஷ்டைகளை ஆரம்பித்து விடுவார்களாம். கிளிண்டனுக்கு குக்கீஸ் பிடிக்கும் என்பதால் அதைக் கொடுத்து சந்தோஷப்படுத்துவாராம் அப்பெண்.

சம்பிரதாய வாழ்க்கை

சம்பிரதாய வாழ்க்கை

தற்போது கிளிண்டனும், ஹில்லாரியும் ஒப்புக்கு சப்பாணி போலத்தான் வாழ்கிறார்கள். 2016ல் அதிபராக வேண்டும் என்ற ஆசையில் ஹில்லாரி உள்ளார். எனவே கிளிண்டனைப் பிரிவது பாதகமாக அமையும் என்பதால் அமைதியாக இருக்கிறார்.

வர்த்தக உறவு

வர்த்தக உறவு

ஏஜென்டுகள் இதுகுறித்துக் கூறுகையில், இது திருமண உறவே அல்ல. பிசினஸ் உறவு. இது முற்றிலும் போலியான உறவு என்கின்றனர்.

கென்னடி, லின்டன் ஜான்சன், ரிச்சர்ட் நிக்ஸன்

கென்னடி, லின்டன் ஜான்சன், ரிச்சர்ட் நிக்ஸன்

கெஸ்லர் தனது புத்தகத்தில் முன்னாள் அதிபர்களான ஜான் கென்னடி, லின்டன் ஜான்சன், ரிச்சர்ட் நிக்ஸன் ஆகியோர் குறித்தும் பல பரபரப்பான தகவல்களைப் போட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+