வாஜ்பாய்க்கு விருது தந்த வங்கதேசம்.. நேரில் பெற்றார் மோடி
டாக்கா: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு வங்கதேசம் போர் விடுதலை (Award of Liberation War) விருதினை வழங்கிக் கெளரவித்துள்ளது. இந்த விருதை வாஜ்பாய் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பெற்றுக் கொண்டார்.
இன்று டாக்காவில் நடந்த விழாவின்போது வாஜ்பாய்க்கு அளிக்கப்பட்ட இந்த. கெளரவத்தை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். வங்கதேசத்து உயரிய விருதாகும் இது. வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டியதற்காக இந்த கெளரவத்தை வங்கதேசம் அளித்துள்ளது.

வங்கதேச அதிபர் அப்துல் ஹமத் இந்த விருதினை பிரதமர் மோடியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விருதினைப் பெற்றுக் கொண்ட பின்னர் மோடி கூறுகையில், இது அனைத்து இந்தியர்களுக்கும் மிகவும் சிறந்த முக்கியமான நாளாகும். தனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தவர் வாஜ்பாய். சாமானிய மக்களின் உரிமைக்காக போராடியவர். என்னைப் போன்ற எத்தனையோ அரசியல்வாதிகளுக்கு, உந்து சக்தியாக திகழ்பவர் என்றார் மோடி.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications