2020ம் ஆண்டே தேவலை.. ஏலியன் முதல் செயற்கை கருப்பை வரை! அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள் 2023!
சோஃபியா: 2023 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் 2020ஆம் ஆண்டை காட்டிலும் மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன. பல்கேரிய ஆன்மீகவாதியான இவருடைய கணிப்புகள் பெரும்பாலும் பலித்துள்ளன என்பதால் ஆண்டுதோறும் இவருடைய கணிப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Recommended Video
1911 ஆம் ஆண்ட வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் பாபா வங்கா பிறந்தார். இவர் ஒரு மூலிகை மருத்துவர். பல்கேரிய ஆன்மீகவாதியாகவும் அறியப்படுகிறார். மேலும் உலக கணிப்புகளையும் கூறுபவர். இவருக்கு 12 வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இவர் இரு பார்வையையும் இழந்துவிட்டார்.
இவரால் கண்கள்தான் தெரியாமல் போனதே தவிர உலக எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். இதுவரை 5079 ஆண்டுகளுக்காக கணிப்புகளை வைத்துள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். எனினும் இவரது கணிப்புகள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

2023 கணிப்புகள்
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளில் முக்கியமானது சூரிய புயல். நாசாவின் கூற்றுபடி சூரிய புள்ளிகளுடன் தொடர்புடைய காந்த ஆற்றலில் இருந்து வெளி வரும் கதிர்வீச்சின் தீவிர வெடிப்பாகும். இந்த புயல்கள் வந்தால் மின்சார தொகுப்புகளை சீரழிக்கும். எண்ணெய் குழாய்களிலும் எரிவாயு குழாய்களிலும் அரிப்பை ஏற்படுத்தும்.

சூரிய புயல்
சூரிய புயல் ரேடியோ தகவல் தொடர்புகளையும் ஜிபிஎஸ் கருவிகளையும் பாதிக்கும். இது நடந்தால் மின் இழப்புகளும் இன்டர்நெட் வசதிகளும் பறி போகும் அபாயம் ஏற்படலாம். பாபாவங்காவின் கூற்றுபடி பூமியின் பாதையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டால் வெப்பநிலை உயரும், அலைகள் மற்றும் கதிர்வீச்சுகளில் பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அணு ஆயுத வெடிப்பு
ஐரோப்பாவில் அணு உலையில் வெடிப்பு ஏற்படலாம். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு 2023 இல் உலகளவில் நெருக்கடி ஏற்படலாம். அடுத்த ஆண்டு 2023 இல் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்தால் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்றும் கணித்துள்ளார். இது மட்டுமல்லாமல் 2028 இல் சுக்கிரன் கிரகத்திற்கு விண்வெளி வீரர் ஒருவர் செல்வார் என்றும் கணித்துள்ளார்.

செயற்கை கரு வளர்ப்பு மையங்கள்
அது போல் 2023 ஆம் ஆண்டு முதல் பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்க கருவை ஆய்வகத்தில் வைத்து வடிவமைத்துக் கொள்ளலாம். குழந்தைகளின் தோல், நிறம், முக அமைப்பு ஆகியவற்றையும் பெற்றோரே முடிவு செய்யலாம் என பாபா வங்கா கணித்துள்ளார். இந்த நிலையில் எக்டோ லைப் எனும் நிறுவனம் ஆய்வகத்தில் பெண்களின் கருப்பையை போல் செயற்கையாக கருப்பையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 30 ஆயிரம் குழந்தைகள் வரை பிறக்க வைக்க முடியும் என கூறியுள்ளனர். இது கிட்டதட்ட பாபா வங்காவின் கணிப்புடன் ஒத்து போயுள்ளது.

2020 ஐ விட பயங்கரமா இருக்கே!
2020 ஆம் ஆண்டு பாபா வங்கா தனது கணிப்புகளில் வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம், 2020 இல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி நடக்கும். அமெரிக்க அதிபராக இருந்த டிரம்பிற்கு மூளைப்புற்று நோய் ஏற்பட்டு காது கேட்கும் திறமை இழக்கலாம். ஐரோப்பா காணாமல் போகும். ஐரோப்பாவில் 2020 தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள் என கணித்துள்ளார். பாபா வங்காவின் கணிப்புகள் பெரும்பாலும் பலித்து போயுள்ள நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் 2020 ஐ விட அதிர்ச்சி அளிக்கக் கூடியவைகளாக உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications