ப்பா... பச்சைப் புள்ளைக்கு எம்புட்டு தலைமுடி... வைரல் ஆன போட்டோ!
கலிபோர்னியா: பிறக்கும்போதே அடர்த்தியான தலை முடியும், அருமையான ஹேர் ஸ்டைலும் கொண்ட குழந்தை ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மக்களின் ‘தலை'யாயப் பிரச்சினைகளுள் ஒன்று முடி உதிர்தல் மற்றும் அடர்த்தியாக முடி வளர வைப்பது தான். அடர்த்தியான கூந்தலை வேண்டாம் என்பவர்களே இருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு மக்களுக்கு தலை முடி மீது ஒருவித ஈர்ப்பு உள்ளது.
View post on imgur.com இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரெட்வுட் நகரத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தை ஒன்று தலை நிறைய அடர்த்தியான முடியுடன் பிறந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்குழந்தையின் தாயார் பெயர் மெக்கன்ஸி கப்லான் (28). சமீபத்தில் தனது கைக்குழந்தையுடன் செல்பி எடுத்து அதனை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார் மெக்கன்ஸி.
அதைக் கண்டு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். காரணம் புதிதாக பிறந்த அக்குழந்தைக்கு தலை நிறைய அடர்த்தியாக முடி இருந்தது தான்.
தற்போது அக்குழந்தையின் படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பிரபல செய்தித் தொகுப்பாளர் ஒருவரின் ஹேர்ஸ்டைல் போன்று அக்குழந்தையின் தலைமுடியும் இருப்பதாகக் கூறி, சிலர் அப்புகைப்படத்தை போட்டோஷாப் செய்தும் ஷேர் செய்து வருகின்றனர்.
குழந்தையின் பெற்றோர்களுடைய மரபணுக்கள் காரணமாக இந்த குழந்தைக்கு இதுபோன்று அடர்த்தியான முடி உள்ளதாக மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications